திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆங்கில புத்தாண்டு, ஆண்டு (2015) ஜனவரி 1–ந் தேதி

  ஆங்கில புத்தாண்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  (2015) ஜனவரி 1–ந் தேதி ஆங்கில புத்தாண்டு ஆஸ்தானமும், 2–ந் தேதி வைகுண்ட ஏகாதசி, துவாதசி விழாவும் நடக்க உள்ளன. அதனையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே பக்தர்கள் அவதிப்படாமல் இருப்பதற்காகவும், தரிசன வரிசைகளில் தள்ளுமுள்ளு நடக்காமல் தவிர்க்கவும் திருமலை–திருப்பதி தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதற்காக தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு திருமலை முழுவதும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:– 

ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய 2 நாட்களில் மொத்தம் 1 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்படும். முதியோர்கள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 2 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 1, 2–ந் தேதிகளில் திவ்ய தரிசனத்துக்கு அனுமதி சீட்டு வழங்குவதும், ஏகாதசி அன்று பிரத்யேக பிரவேச தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது. 

300 ரூபாய் தரிசன டிக்கெட் துவாதசி அன்று வழக்கம்போல் ஆன்லைன் மூலம் வழங்கப்படும். 1–ந் தேதி விசேஷ நாட்களாக இருப்பதால் மூலவருக்கு பூலங்கி சேவை தரிசனமும், 2–ந் தேதி மூலவருக்கு அபிஷேகமும் நடப்பதால், தரிசன நேரம் குறைவாக உள்ளது. எனவே நேரடியாக வரும் வி.ஐ.பி. பக்தர்களுக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும். 

பக்தர்கள் கொண்டு வரும் தரிசன சிபாரிசு கடிதங்களும், தங்கும் விடுதிக்கான சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படும். வி.ஐ.பி.களுக்கு வழங்கப்படும் ஒரு டிக்கெட்டுக்கு 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வி.ஐ.பி.டிக்கெட் குறைந்த எண்ணிக்கையில் வழங்கப்படும். 2 நாட்களுக்கு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. லட்டு பிரசாதம் 5 லட்சம் இருப்பு வைக்கப்படும். 

பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். பக்தர்கள் தரிசன வரிசைகளில் அதிக நேரம் காத்திருப்பதால் பந்தல்கள் அமைக்கப்படும். பல இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும். 

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.