சனிதோஷம் போக்கும் ஏகாம்பரேஸ்வரர்

சென்னை பாரிமுனையில் ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு   சனிதோஷம் உள்ளவர்கள், சனிதோஷ தினத்தில் இவரை வழிபட்டால் நீங்கும் என்பது ஐதீகம். 
இங்குள்ள ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தால் அபிஷேகம் செய்து, வெற்றிலை மாலை சாத்தி வழிபட்டால் வாழ்வு சிறக்கும், பயம் நீங்கும் என்பது நம்பிக்கை. குடும்பத்தில் சகோதரர்களுக்குள் பிரச்சனை இருந்தால், கனிகள் படைத்து, பாலாபிஷேகம் செய்து வழிபட்டால், பிரச்சனைகள் தீருவதாக நம்பிக்கை. 
இத்தலத்து அம்பாள், ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளே இங்கு பிரதானம். ஆணும், பெண்ணும் சமம் என்பதை சிவன், அர்த்தநாரீஸ்வர அம்சம் மூலமாக உணர்த்தியதைப்போல, இவள் ஆவுடையார் மீது நின்றபடி, சிவனில் சக்தி அடக்கம் என உணர்த்துகிறாள். 
இவளது பாதத்தின் முன்பு ஸ்ரீசக்கரம் உள்ளது. திருமணமான பெண்கள் கணவருடன் ஒற்றுமையாக இருக்கவும், சனி தோஷம் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர். சிவன் சன்னதிக்கு முன்வலப்புறத்தில் தூணில் சிவ ஆஞ்சநேயர் இருக்கிறார். 
இவருக்கு வெள்ளி நிறத்திலான ஜரிகை பூசி, துளசி மாலை சாத்தி வணங்கினால் நாம் கண்ட நற்கனவுகள் பலிக்கும், தீய கனவுகளாக இருந்தால் அவை நம்மை அண்டாமல் விலகிஓடும் என பக்தர்கள் நம்புகின்றனர். 
எனவே, இவரை "கனவு ஆஞ்சநேயர்'  என்றும் அழைக்கிறார்கள். பிரகாரத்திலும் ஒரு ஆஞ்சநேயர் வடக்கு நோக்கியபடி உள்ளார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.