திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.
• தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரியபாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
• கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செய்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
• கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.
• கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
• தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen