சாந்திராயன பகுதியின் 11-வது நாளான ஏகாதசியில் உபவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கலியுகத்தில் நம்பிக்கை, வைராக்கியம் மற்றும் பக்தியுடன் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு, மனமானது முழுக்க ஹரியிடம் செலுத்தப்பட்டால் ஒருவன் பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுவிக்கப்படுவான்.
இதில் ஐயமேயில்லை. இந்த விஷயத்தில் மறை நூல்கள் நமக்கு உறுதி அளிக்கின்றன. பக்தர்கள் இந்த தினத்தில் உபவாசம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து ஜபம் செய்து ஹரி கீர்த்தனம், தியானம் செய்கின்றனர். சிலர் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்துவதில்லை. பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம்.
ஏகாதசி நாட்களில் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. இது மிகவும் முக்கியம். பிரம்மாவின் தலையிலிருந்து விழுந்த வியர்வை. ஓர் அரக்கனின் உருவத்தை எடுத்து, எனக்கு வசிக்க ஒரு இடம் கொடுங்கள் என்று கேட்டது. "அரக்கனே, ஏகாதசி அன்று சாப்பிட்டவர்களின் சாதத்தில் போய் இருந்து கொண்டு அவர்கள் வயிற்றில் புழுக்களாக ஆவாயாக'' என்று பிரம்மா பதில் சொன்னார்.
இதற்காக ஏகாதசி அன்று சாதம் தவிர்க்கப்படுகிறது. ஒருவன் ஏகாதசி உபவாசத்தை தொடர்ந்து செய்தால் பகவான் ஹரி மகிழ்வுறுகிறார். எல்லாப் பாவங்களும் போக்கப்படுகின்றன. மனம் தூய்மை அடைகிறது.
பக்தி படிப்படியாக வளர்கிறது. கடவுளிடம் பக்தி தீவிரமடைகிறது. ஆசார சீலர்கள் சாதாரண ஏகாதசி நாட்களில் கூட பூரண உபவாசத்துடன் விழித்திருக்கின்றனர். விஷ்ணு பக்தர்களுக்கு ஒவ்வொரு ஏகாதசியும் புனிதமான நாள்தான்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen