புது வீடு கட்டி குடிபுகுரலுக்கு தயார் நிலையிலிருப்பவர்களிற்கும், ஒரே வீட்டில் பல இன்னல்களை துன்பங்களை அனுபவிப்பவர்களிற்கும் வாழ்பவர்களிற்கும் சிறந்த வாஸ்து பரிகாரம் செய்வதன் மூலம்
நன்மையடையலாம்.
வீட்டில் சில பொருட்களை வாஸ்து பரிகாரமாக வைப்பதன் மூலம் எதிர்மறை சக்திகள் வீட்டில் அண்டாமல் ஓடி விடும்.
இவற்றை தொடர்ந்து செய்து வருவதால் வீட்டிலும், வாழ்விலும் மிகப் பெரிய மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடியும்.
மணிகள்
வீட்டில் அலங்காரத்திற்காக சிறிய மணியோசை கேட்பது போன்ற தோரணங்கள், பாசி மணிகள் ஆகியவற்றை தொங்கட விடலாம். இவை காற்றில் அசையும் போது ஏற்படும் ஒலியால் வீட்டில் உள்ள தீய சக்திகள் விலகி ஓடுவதுடன், பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்க துவங்கும்.
உப்பு :
வீட்டில் உள்ள ஒவ்வொரு மூலையிலும் கல் உப்பிவை சிறிதளவு வைப்பது நல்லது. கல் உப்பிற்கு தீய சக்திகள் அல்லது எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் தன்மை உண்டு. இதனால் தீய சக்திகளால் ஏற்படம் பாதிப்புக்கள் குறைந்து வீட்டில் நல்லது நடக்க துவங்கும்.
சாமி சிலைகள் :
சிறிய அளவிலான சாமி சிலைகள், சாமி படங்கள் அல்லது ஸ்வஸ்திக், ஓம், விநாயகர் உருவம் போன்ற ஆன்மிக சின்னங்களை வீட்டின் வரவேற்பு அறை, படுக்கை அறை போன்றவற்றில் மாட்டி வைக்கலாம். இவற்றை அடிக்கடி பார்ப்பதால் அன்றாடம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட பலன்கள் குறையும்.
எலுமிச்சை
எலுமிச்சைக்கு தீய சக்திகளை ஈர்க்கும் தெய்வீக தன்மை உண்டு. ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு வைக்கலாம். இது வீட்டில் தீய சக்திகளை அண்ட விடாமல்
தடுக்கும். இது மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரமாகும். வாரத்திற்கு ஒருமுறை, சனிக்கிழமைகளில் மட்டும் இந்த நீரை மாற்றினால் போதும்.
நறுமணப் பொருட்கள் :
வீட்டில் எப்போதும் நறுமணம் நிறைந்திருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி ஏற்றி வைக்கலாம். காலையிலும், மாலையிலும் வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் தீய சக்திகள் நம்முடைய வீட்டை நெருங்காமல் இருக்கும். வீட்டில் நறுமணம் எப்போதும் இருந்து கொண்டே இருந்தால் தெய்வீக சக்தி நிறைய துவங்கும்.
கண்ணாடி :
வீட்டிற்கு வெளியில் அல்லது வீட்டில் நுழைந்த உடன் கண்ணில் படும் இடத்தில் கண்ணாடி ஒன்றை மாட்டி வைக்கலாம். இது எதிர்மறை சக்திகளை வீட்டிற்குள் அண்ட விடாது. வீட்டு வாசல் : வீட்டு வாசலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். மங்கலகரமாக கோலமிட்டு
வைத்திருக்க வேண்டும்.
வீட்டு வாசலில் பாதைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எந்த ஒரு பொருட்களை வைப்பதும், வீட்டிற்குள் வரும் பாதையை மறைத்து வாகனங்கள் நிறுத்துவதோ கூடாது.
வாசல் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது பாசிடிவ் எனர்ஜி வீட்டில் அதிகம் நிறைவதற்கு வழிவகுக்கும்.
இவற்றை நீங்களும் நல்ல நாள் மற்றும் விசேஷ தினங்களில் தொடங்கி தொடர்ந்து செய்து வர வீட்டில் எதிர்மறை சக்திகள் அண்டாது நல்ல சக்திகள் வந்து சேரும். என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen