பெண்களே எப்போதுமே இப்படி தலையை சீவி கொள்ளாதீர்கள். அதிர்ஷ்டம் உங்களை விட்டு போய்விடும்..
பொதுவாகவே நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய
சூழ்நிலையில் தலைவிரி கோலமாக இருப்பதுதான் ஃபேஷன் என்று
ஆகிவிட்டது. ஆனால், எதற்காக பெண்கள் தங்களுடைய கூந்தலை பின்னி முடிந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள்! இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து
கொள்ளலாம்.
அந்த காலங்களில் எல்லாம் துயரம் ஏற்படும் சமயத்தில் தான் தலைவிரி கோலமாக இருப்பார்கள். கண்ணகி தன் கணவனை
இழந்த பின்புதான் தலைவிரி கோலமாக தன்னை மாற்றிக் கொண்டால். வீட்டில் ஏதாவது தூக்கம் நடந்துவிட்டால் தான் இப்படி தலைவிரி கோலமாக
இருந்து, தங்களுடைய கஷ்டத்தை வெளிப்படுத்துவார்கள். இந்த விஷயங்கள் எல்லாம் நமக்குத் தெரிந்தது தான். இருந்தாலும் தலைவிரி கோலம் என்பது இந்த காலகட்டத்தில் வளர்ந்து வரும் நாகரீகம் ஆகிவிட்டது.
ஒரு குடும்பத்தின் குலத்தை விரிவுபடுத்தும் பெண்ணுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் உண்டு. இந்த பெண்ணாகப் பட்டவள் புகுந்த வீட்டையும் பிறந்த வீட்டையும் ஒன்றாக இணைக்கும் ஒரு சக்தியாக இருக்க
வேண்டும். அதாவது பெண்கள் ஜடை பின்னி கொள்ளும் போது, தங்களது முடியினை மூன்றாகப் பிரித்து, அதன் பின்பு மூன்று
பிரிவுகளையும் சேர்த்து பின்னி கொள்வார்கள். இந்த மூன்று பிரிவில் நடுவில் இருப்பது, அந்த
பெண்ணாகவும், வலது பக்கம், இடது பக்கம் இருக்கும் பிரிவு, புகுந்த வீடும் பிறந்த இடமாகவும், கருதப்படுகிறது. இரு வீட்டாரையும் என்றைக்குமே ஒன்றாக
வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த பின்னல் வலியுறுத்துவதாக
சொல்லப்படுகிறது
இது மட்டுமல்லாமல், பெண்களுக்கு உடம்பில் இருக்கும் நல்ல சக்தியானது மயிர் கால்களின் வழியாக வெளியேறுவதாகவும் சில
சாஸ்திர குறிப்புகள் சொல்லப்படுகின்றன. இதனால்தான் அந்த காலங்களில் எல்லாம் பெண்கள் தங்களுடைய கூந்தலின் முனையை
குஞ்சிலத்தால் கட்டிக் கொள்வார்கள். அல்லது ரிப்பன் வைத்து முடிச்சு போட்டு கொள்வார்கள். அதாவது கூந்தலின் நுனிப்பகுதி வெளியில் தெரியாத
அளவிற்கு மறைத்து
வைத்து இருப்பார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
நம்முடைய முன்னோர்கள், பெண்கள் தலைவிரி கோலமாக இருக்கக்கூடாது என்று சொல்லுவார்கள் என்பதாகும்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen