வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழாவில் சமுத்திரத் தீர்த்தம் .17-09-2024. செவ்வாய்க்கிழமை அன்று மாலை வடமராட்சி, பருத்தித்துறை - கற்கோவளம் கடற்பரப்பில்வெகு சிறப்பாக இடம்பெற்றது .16ம் திருவிழாவான சமுத்திரத் தீர்த்த உற்சவ திருவிழாவிற்கு நாட்டின் பல்வேறு
பகுதியில் இருந்தும் அடியவர்கள் பல்லாயிரம் பேர் கலந்து
கொண்டனர்.
இதேவேளை மக்களுக்கு உரிய சுகாதார மற்றும் அடிப்படை வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபை, பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளும் வழங்கியிருந்ததுடன் மக்களிறக்கான
பாதுகாப்பு மற்றும் ஒழுங்குகளை பருத்தித்துறை பொலிஸாரும் மேற்கொண்டிருந்தனர்.
ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் துணை.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen