திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் உகந்த நேரமாகப் பிரம்ம முகூர்த்தம் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
காலை 4 மணி முதல் 6.30 மணி வரையான
நேரத்தைப் பிரம்ம முகூர்த்தம் என்கிறார்கள். உலகத்தில் இருக்கும் உயிர்களைப் படைக்கக்கூடிய பிரம்ம தேவனின் மனைவியான சரஸ்வதி தேவி கண்களுக்குச் செயல்படும் நேரமாக இந்த பிரம்ம
முகூர்த்தம் கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த நேரத்திற்குச் சரஸ்வதி யாமம் என்ற பெயரும் உள்ளது. மனதில் ஏற்படக்கூடிய சிக்கல்களை நீக்கவும், இறைச் சிந்தனையை மனதில் நிறுத்தவும் இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதமான நேரமாக இந்த பிரம்ம முகூர்த்தம் கூறப்படுகிறது.
இந்த நேரத்தில் சிவபெருமானை நினைத்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழும் எனக் கூறப்படுகிறது. இந்த
நேரத்தில் சிவபெருமானை வழிபட்ட தான் பிரம்மதேவன் பல வரங்களைப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது. அதற்காகவே இந்த நேரத்திற்குப் பிரம்ம
முகூர்த்தம் எனப் பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன. இந்த நேரத்தில் நாமும் கண்விழித்து நீராடி நினைத்த காரியங்களைத் தொடங்கினால் அது வெற்றியில் முடியும் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை குளிக்க முடியாதவர்கள் பல் துலக்கி விட்டு கை கால்களை மட்டுமாவது சுத்தப்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் நேரம் பற்றி சில குறிப்புகளை இங்கே காணலாம். சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன்பு பிரம்ம முகூர்த்தம் நேரம் ஆரம்பமாகிறது.
இது மிகவும் சுப முகூர்த்த நேரமாகக் கருதப்படுகிறது. இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருமணம் செய்வது, வீட்டு கிரகப்பிரவேசம் உள்ளிட்ட அனைத்து சுப நிகழ்ச்சிகளும் நடைபெற்றால் வீட்டில் சுபத் தன்மை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. பிரம்ம முகூர்த்தம் எனப்படும் இந்த
நேரத்தில் நட்சத்திர, யோக தோஷங்கள் கிடையாது அந்த நேரம் எப்போதும் சுப வேலை தான் எனக் கூறப்படுகிறது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு இறைவனை வழிபாடு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு மற்ற
காரியங்களைச் செய்தால் அன்றைய தினம் உற்சாகத்துடன் இருக்கும். உச்சக்கட்ட சுப நேரமான
இந்த பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் உள்ள பூஜை அறையில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் அனைத்து சகல சௌபாக்கியமும் பெறலாம்
என்பது ஐதீகமாகும்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen