முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வான பாக்கு தெண்டல் உற்சவம்.25-05-20. இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.பாரம்பரியமாக தெய்வமாகிய வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தை மேற்கொள்ள 
ஆரம்ப காலத்தில் ஆலயத்துக்கு வருமானம் இல்லை.இதனால் 09 வீடுகளுக்கு சென்று பொங்கலுக்கு அறிவிக்கும் முகமாக இந்த நிகழ்வு சம்பிரதாயமாக இடம்பெறுகிறது.பொங்கல் வருகை தர இருக்கின்றது
 என்பதை அறிவித்து அடுத்த 07 ஆம் நாள் தீர்த்தம் எடுத்து வந்து பொங்கல் உற்சவம் இடம்பெறும். இதற்கான அறிவித்தலாகவே இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெறுவது வழமை.நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் ஒன்று கூடுவதற்கு 
தடைகள் விதிக்கப்பட்டு இருந்தாலும், குறிப்பிட்ட அளவு பக்தர்களோடு.25-05-20. இன்று அதிகாலையில் இந்த உற்சவம் இடம் பெற்றிருந்தது.அதிகாலை 1.45 மணியளவில் ஆலயத்தில்
 மடை பரவி வழிபாடுகள் இடம்பெற்றதை தொடர்ந்து ஒன்பது குடும்பங்களிடம் சென்று இந்த பாக்கு தெண்டல் உற்சவம் இடம்பெற்றது.பாக்கு தெண்ட சென்றவர்கள் ஆலயத்தை வந்ததும் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று இன்றைய உற்சவம்
 நிறைவு பெற்றுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.