யாழ் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் கொடியேற்றம்

யாழில்   வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை 12:20 மணியளவில் கொடியேற்றத்துடன் 
ஆரம்பமானது. 
கொடியேற்றத்தை முன்னிட்டு. நேற்றைய தினம் புதன்கிழமை பின்னிரவு முதல் விசேட பூஜைகள் இடம்பெற்று , இன்றைய தினம் அதிகாலை பக்தர்கள் புடைசூழ்ந்த நிலையில், பக்தி பரவசத்துடன் கொடியேற்றம்
 நடைபெற்றது. 
கொடியேற்ற தினத்தின் சிறப்பம்சமாக வள்ளிக்கொடி முளைத்தமை பக்தர்களிடையே பெரும் ஆன்மிக உணர்வையும் பரவசத்தையும் ஏற்படுத்தியது. இதனை முருகப்பெருமானின் அருளின் அடையாளமாக பக்தர்கள் பக்தியுடன் நோக்கினர். 
கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று , எதிர்வரும் 26ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், மறுநாள் 27ஆம் திகதி தேர்த் திருவிழாவும் இடம்பெறவுள்ளது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

http://lovithan.blogspot.com/2012/08/blog-post_3684.html






0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.