யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தா மகோற்சவ கொடியேற்றம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம்,18-08-2026-  இன்று பக்தி பரவசத்துடன் 
ஆரம்பமானது. 
இலங்கை திருநாட்டின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வருகை தந்துள்ள பக்தர்கள் நல்லூர் கந்தனை தரிசிக்க ஆவலுடன் திரண்டுள்ளனர். 
மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, பக்தர்களின் “வேல் முருகா… வெற்றி வேல் முருகா!” என்ற கோஷங்களுடன் கொடியேற்ற நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது. 
கொடியேற்றத்துடன்-18-08-ö2026- இன்று ஆரம்பம்  இந்த மகோற்சவ காலத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்களையும், சுவாமி வீதி உலாக்களையும் காண்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தற்போது நல்லூரை நோக்கி படை எடுத்துள்ளனர். 
நல்லூர் கந்தனின் அருளால் அனைவரது வேண்டுதல்களும் நிறைவேறி  குடும்பங்களில் சந்தோஷமும், மனதில் நிம்மதியும், வாழ்வில் வளமும் பெருகட்டும். 
பக்த அடியார்களின் குறை தீர்க்கும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ கொடியேற்றத்தை முதற்தர வானொலி சூரியனின் சமூக வலைத்தளங்களில் அடியார்கள் அனைவரும் கண்டு மகிழுங்கள். 
அழகு வேல் முருகா வெற்றி வேல் முருகா!

http://lovithan.blogspot.com/2026/05/blog-post_22.html




0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.