உங்கள் வீட்டில் கணபதி ஹோமம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

 வீட்டில் வருடத்துக்கு ஒரு முறை கணபதி ஹோமம் செய்யுங்கள். அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? 
 வீட்டில் அல்லது தொழில் துவங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வதனால் குடும்பத்தில் அல்லது 
நிறுவனத்துக்கு
 நோய்கள், தொழிலில் தடைகள், மனக் குழப்பம், எதிர்மறை
 எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும் என்பதில் ஐயம்
 ஏதும் இல்லை. 
 கணபதி ஹோமம் விநாயக பெருமானை நோக்கி தவ்ச்ம் செய்வது போன்றது. இக்கலி யுகத்திலும் கேட்டதும் காட்சி கொடுத்து உடனடியாக 
வசியமாகி அருளும் தெய்வம் என்றால் வினாயகர் என்பதனால் தான் எப்பொழுதும் அவரை வணங்கி அனைத்தையும் 
ஆரப்பிக்கிறோம்.
கவனிக்கவேண்டியவை:- 1- விநாயகர் ஹோமம் செய்ய ஒரு புரோகிரையோ, தமிழ் அர்ச்சகரையோ அழைக்கும்பொழுது அவர்கள் அமைதியாக பணத்துக்கு மட்டுமல்லாது ஹோமத்தை சரியாக வெறும் மந்திரம் அல்லாது விநாயகருக்கான தேவாவரங்கள், போற்றிகள், 
பஜனைகள் 
செய்து, அதிக மந்திரங்கள் ஓதி விநாயகர் ஹோமத்தில் இறங்கி நடமாடும் படி நல்ல ஆச்சாரத்தோடு செய்தால் மிக மிக சிறப்பாகும்.
அதுவே சரியான கணபதி ஹோமம் ஆகும். சரிதாக 
ஹோமம் செய்தால் அன்றிரவு கனவில் பிள்ளையார் அல்லது யானைகள் காட்ச்சி கொடுக்கும். இது இக்கலி யுகத்திலும் சாத்தியமாகும். ஏற்படும் நன்மைகள்:-
 கணபதி ஹோமம் செய்வதனால் பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மேலும் திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், 
செல்வ செழிப்பும் வந்து சேரும்.
 ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கி புத்துணர்வு 
அடைய செய்யும். 
 குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள். படிப்பது மனதில் நிற்கும். இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை
 எளிமையாக்கும். 
 ஏதிர்பாராத விதமாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும். கணபதி ஹோமம் செய்வதினால்
 பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றமும் ஏற்படும். ஒரு ஆண்டுக்கு ஒருமுறை 
கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் சந்தோஷம் நிறைந்ததாக
 இருக்கும்.
அத்துடன் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் வெளியேறி மாறாக சாதக சக்திகள் அதிகரிக்கும். கணபதி ஹோமத்தை எப்பொழுது செய்வது சிறப்பு? 
மகாகணபதி ஹோமத்தை வெள்ளிக் கிழமைகளில் சுக்ல பட்ச சதுர்த்தி, ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் செய்தால் விசேஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பிடித்து வைத்தால்
 பிள்ளையார் என்பார்கள்.
 அத்தனை எளிமையான தெய்வத்தை சிக்கெனப் பிடித்தால் சீரும் சிறப்போடும் வாழலாம் என்பது என்பது பலரது அனுபவ உண்மையாகும்.
 ஆம் கணபதி ஹோமம் செய்யுங்கள் நீடூளி வாழுங்கள்.
 



 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.