பக்தர்களின் முடி 11.5 கோடிக்கு ஏலம்


திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியை எடுத்துக்கொள்ளும் உரிமை ரூ 11.கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. தமிழக கோயில்களில் முடிகாணிக்கை ஏலம் எடுக்கப்பட்டத்தில் இதுவே அதிகபட்ச தொகையாகும்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த கோயில் கடந்த 2011 ஆண்டுக்கு முன்னர் பக்தர்கள் செலுத்திய காணிக்கை முடி எடுக்கும் உரிமை ரூ 6 கோடிக்கு சென்றது. கடந்த ஆண்டு முடிகாணிக்கை உரிமம் ஏலம் ரூ 10 கோடிக்கு சென்றது.

இதனைதொடர் ந்து 2012&2013ம் ஆண்டிற்கு காணிக்கை முடியை எடுத்துக்கொள்ளும் உரிமையை மதுரையை சேர்ந்த முடி ஏற்றுமதி நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் என்பவர், ரூ 11 கோடியே 50 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.

இதுவே தமிழக கோயில்களில் காணிக்கை முடியை எடுத்துக்கொள்ளும் உரிமம் பெறுவதற்கு அதிகபட்சமாக ஏலம் எடுக்கப்பட்ட தொகையாகும் என்பது குறிப்பிடதக்கது. இந்த முடியில் இருந்து ஒருவகையான திரவம் பிரித்து எடுக்கப்பட்டு ஜப்பான், ரஷ்யா, போன்ற வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.