வற்றாப்பளை கண்ணகை அம்மனுக்கு நாளை கோலாகல பொங்கல் உற்சவம்!

வரலாற்று புகழ்மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய பெரும் பொங்கல் விழா நாளை திங்கட்கிழமை வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளன. வைகாசித் திங்களில் கண்ணகி தெய்வத்துக்கு பொங்கலிட்டு வழிபாடாற்றும் தினத்தில் நாடு முழுவ தும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இம்முறையும் சுமார் 5லட்சம் பேர் வரை இந்த நிகழ்வில் கலந்து கொள்வர் என்று எதிர்பார்க் கப்படுகின்றது. இந்த அற்புதத் தலத்துக்கு வருடா வருடம் வைகாசித் திங்கள் நாளில் வன்னி வாழ் மக்கள் திரண்டு வந்து கண்ணகை அம்மனுக்கு பொங்கலிட்டு தங்களின் நேர்த்திகளை நிறைவேற்றுவர். குடாநாட்டு மக்கள் மட்டுமன்றி நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தகோடிகள் அங்கு வரத் தவறுவதில்லை. மங்கலகரமான அந்த வழமையான (பொங்கல்) கருமத்துக்கு முன்னோடியாகக் கடந்த 28 ஆம் திகதி திங்கட்கிழமை காட்டா விநாயகர் ஆலயத்தில் உள்ள அம்மனுக்கு இரவு 10 மணியளவில் நந்திக்கடல் நீரில் விளக் கேற்றும் நிகழ்வு இடம்பெற்றது. இந்த அற்புத பாரம்பரிய நிகழ்வு வைகாசித்திங்கள் பொங்கல் நாளுக்கு முதல் ஞாயிறுவரை தொடர்ந்து ஏழு தினங்கள் பக்தி பூர்வமாக நடைபெறும். மடைப்பண்டம் செல்லுதல்இன்று இரவு காட்டா விநாயகர் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகள் முடிவுற்றதும் நாளை திங்கள் இரவு வற்றாப்பளை கண்ணகி ஆலயத்தில் நடைபெறும் பொங்கலுக்குரிய மடைக்கு உரிய பொருள்களை இவ்வாலயத்தில் இருந்தே கொண்டு செல்வது வழமையாகும். இதனையே “மடைப்பண்டம் செல்லுதல்’ எனக் கூறப்படும். இந்த ஆலயத்தில் இருந்து மூன்றரைக்கால் தொலைவில் உள்ள கண்ணகி ஆலயத்துக்கு மடைக்குரிய பொருள்கள் பயபக்தியுடன் எடுத்துச் செல்லப்படும். திங்கள் அதிகாலை முதல் திங்கள் இரவு முழுவதும் கண்ணகி அம்மன் ஆலயம் சூழ்ந்த பகுதியில் பக்தர் கூட்டம் அலைமோதும். இந்த பெரும் உற்சவத்துக் கான போக்குவரத்துச்சேவை சுகாதார சேவைகள் மற்றும் அடிப்படைத் தேவைகள் போன்ற அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.