பெரியகல்லாறு கடல்நாச்சியம்மன் வருடாந்த திருச்சடங்கு

பெரியகல்லாறில் அமையப்பெற்றுள்ள கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்குகளை முன்னிட்டு பாற்குட பவனி நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாக இடம்பெற்றது. இலங்கையின் முதல் கடல்நாச்சியம்மன் ஆலயமாகவுள்ள இந்த ஆலயத்தின் வரலாறு சுமார் 1000 வருடங்களைக்கொண்டதாகக் கணிக்கப்படுகின்றது. ஒரு நாள் சடங்காக சிறப்பிக்கப்படும் இந்த ஆலயத்தின் திருச்சடங்கு இன்று திங்கட்கிழமை மாலை பூரணை தினத்தில் ஆரம்பித்து நாளை செவ்வாய்க்கிழமை காலை நிறைவடையும். அதனையொட்டி பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து பாற்குட பவனி இடம்பெற்றது. இந்தப் பாற்குட பவனியில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர். பாற்குட பவனியானது ஆலயத்தினை வந்தடைந்ததும் ஆலய அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. கடல்நாச்சியம்மன் திருச்சடங்கையொட்டி பிற்பகல் 4.30மணியளவில் பெரியகல்லாறு சர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அன்னையின் பூசைப்பொருட்கள் கொண்டுவரப்படவுள்ளன.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.