திருமாலுக்கு, சிவன் வழங்கிய ‘ருத்ராட்சம்’

June 26th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

திருமால் உலகில் அநியாயம் தலை தூக்கும் போது, அவரே அவதாரம் எடுத்து வந்து அநியாயத்தில் இருந்து மக்களை காப்பது வழக்கம். இவ்வாறு அவர் பத்து முறை அவதாரம் எடுத்து மக்களை காத்துள்ளார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திரன் முதலிய முப்பத்தி  முக்கோடி தேவர்களும் திருமாலையும், லட்சுமியையும் வணங்கி ஏராளமான நவரத்தினக் குவியல்களையும், பொன்னையும் பொருளையும் வழங்கினர்.

ஆனால் சிவபெருமானோ திருமாலுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரிமுக ருத்ராட்சம் ஒன்றை கொடுத்து அனுப்பி இருந்தார். திருமால் அதை மிகவும் பணிவுடன் பெற்றுக் கொண்டு தனது கண்களில் ஒற்றிக் கொண்டார்.

இதனைக் கண்ட மகாலட்சுமி மிகுந்த கோபம் கொண்டு, திருமாலிடம் “சுவாமி இந்திரன் முதலான தேவர்கள் தங்களுக்கு ஏராளமான நவரத்தினங்களையும், பொன்னையும், பொருளையும் தங்களுக்கு காணிக்கையாக வழங்கினர். ஆனால் சிவபெருமான் மட்டும் தங்களை இழிவு படுத்தும் எண்ணத்துடன் ஒரே ஒரு ருத்ராட்சத்தை மட்டும் கொடுத்து அனுப்பி உள்ளார். உடனே அதனை விட்டெறியுங்கள் என்றாள்.”

இதனைக் கேட்ட திருமாலோ, மகாலட்சுமியிடம் துலாபாரத்தை கொண்டு வரச் சொல்லி, ஒரு தட்டில் இந்திரன் முதலான தேவர்கள் வழங்கிய செல்வங்களையும் மற்றொரு தட்டில் சிவன் அளித்த ருத்ராட்சத்தையும் வைத்தார்.

என்ன அதிசயம் பாருங்கள்! தேவர்கள் அளித்த அத்தனை செல்வங்களும் ருத்ரன் வழங்கிய ருத்ராட்சைக்கு சமமாகவில்லை.

இதனைக் கண்ட மகாலட்சுமி தனது தவறை உணர்ந்து திருமாலிடம் மன்னிப்பு கேட்டாள்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.