அமெரிக்காவில் அனுமதிப்பத்திரம் பெற்றது கூகிள் நிறுவனத்தின் சாரதியற்ற கார்

அமெரிக்காவின் நெவடா மாநிலபோக்குவரத்துத் துறைசாரதியின்றி சுயமாக இயங்கும் காருக்குஅனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது. பிரபல இணையத்தள நிறுவனமான கூகிள் நிறுவனம் மேற்படி டொயோட்டா பிரையுஸ் ரக காரை சாரதியின்றி இயங்கக்கூடியதாக வடிவமைத்திருந்தது. இக்காருக்கு நெவடா மாநில அரசாங்கம் அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலம் அம்மாநில வீதிகளில் இக்கார் விரைவில் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணினியின் மூலம் இயங்கும் இக்காரின் மீது வீடியோ கமரா, ராடர் மற்றும் லேசர் உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வீதியிலுள்ள ஏனைய வாகங்களை கண்காணித்து இக்கார் தனது பயணத்தை மேற்கொள்ளும். ஏனைய பல கார் தயாரிப்பு நிறுவனங்களும் சாரதியற்ற காருக்கு நெவடா மாநிலத்தில் அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முயற்சித்து வருகின்றன. கூகிள் நிறுவன பொறியியலாளர்கள் கலிபோர்னியா மாநில வீதிகளிலும் இந்த காரை பரீட்சித்தனர். இந்த கார் 140000 மைல் தூரம் பயணித்துள்ளதாக மென்பொருள் பொறியியலாளரான செபஸ்டீன் த்ருன் கூறியுள்ளார். ஒரு தடவை போக்குவரத்து சமிக்ஞை விளக்கொன்றின் அருகில் நிற்கும்போது பின்னால் வந்த கார் இடித்ததை தவிர வேறு எந்த விபத்தையும் சாரதியற்ற தமது கார் எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.