காலி சிறைச்சாலையில் திடீர் சோதனை: 44 கைத்தொலைபேசிகள் மீட்பு

புதன்கிழமை, 11 யூலை 2012
காலி சிறைச்சாலையில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 44 கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனை நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது நவீன தொழிநுட்பத்துடன் கூடிய மூன்று கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கைதிகள் கையடக்கத் தொலைபேசி வைத்திருக்க சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு குறிப்பிட்டுள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.