வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக் கந்தன் ஆலய ஆடிவேல் மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
கதிர்காம திருத்தலத்தில் கன்னிக்கால் நாட்டும் வைபவம் இடம்பெற்று 45 நாட்கள் கடந்துள்ள நிலையில் இன்று ஆடிவேல் மகோற்சவத்தின் முதலாவது ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இன்றிரவு ஏழு மணியளவில் கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் நடைபெறும் விசேட பூஜை வழிபாடுகளை அடுத்து இரவு எட்டு மணியளவில் ஊர்வலம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த ஊர்வலம் வள்ளியம்மை ஆலயம் வரை சென்று மீண்டும் கதிர்காமக் கந்தனின் ஆலயத்தைச் சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் முதலாம் திகதி வரை தினமும் கதிர்காமக் கந்தனின் ஊர்வலம் நடைபெறவுள்ளது.
ஆடிவேல் மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக எதிர்வரும் 30 ஆம் திகதி தீ மிதிப்பு வைபவம் இடம்பெறவுள்ளது.
மாணிக்க கங்கையில் அடுத்த மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள தீர்த்த உற்சவத்துடன் கதிர்காமம் திருத்தலத்தின் ஆடிவேல் மகோற்சவம் நிறைவுபெறவுள்ளது