வெவ்வேறு நாடுகளில் பிறந்த இரட்டை குழந்தைகள்

 

 11 July 2012
பொதுவாக இரட்டை குழந்தைகள் ஒரே ஊரில் பிறப்பதைத் தான் பார்த்து இருக்கிறோம். ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் வெவ்வேறு நாட்டில் பிறந்துள்ளன.
டோனா கீனன் (வயது 28) என்ற அப்பெண்ணுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண்ணிற்கு இரட்டை குழந்தை என்று தெரிய வந்தது.
இங்கிலாந்தில் நார்த்தம்பர்லேண்டில் உள்ள தனது தாத்தா வீட்டில் அப்பெண் தங்கியிருந்த டோனாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதையடுத்து, தாத்தா வீட்டிலேயே அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால் குறைபிரசவத்தில் பிறந்து இருப்பதால் மற்றொரு குழந்தையை மருத்துவமனையில் வைத்து பெற்றெடுப்பது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டது.
அதையடுத்து உயிர் காக்கும் ஊர்தி மூலமாக இங்கிலாந்து எல்லையை கடந்து ஸ்காட்லாந்தில் மெல்ரோஸ் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் டோனாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
அதாவது இரட்டை குழந்தைகளில் முதல் குழந்தை பிறந்த ஒரு மணி 40 நிமிடங்கள் கழித்து, அதுவும் வேறு ஒரு நாட்டில் அவருக்கு  இரண்டாவது குழந்தை பிறந்தது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.