|
சென்னையில் புறநகர் பகுதியான புளியந்தோப்பு, வி.கே.காலனியை சேர்ந்த குமாரியின்
(28) மகன் பிரவின். 5 வயது சிறுவனான இவன், நேற்று முன்தினம் மாலை அம்மாவிடம் 10 ரூபாய் வாங்கிச்சென்று, நாவல் பழம் வாங்கியுள்ளான். இதை தனது பக்கத்து வீட்டில் வளரும் குதிரைக்கு ஊட்டினான். குதிரை முதலில் 2 பழம் சாப்பிட்டது. 3வது பழத்தை ஊட்டியபோது அவனது விரலை குதிரை கடித்து துண்டாக்கியது. இதனால் மிகவும் படுகாயமடைந்த அச்சிறுவனை ஸ்டான்லி அரசு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இருப்பினும் அவனது கட்டை விரலை மீண்டும் இணைக்க முடியாதென வைத்தியர்கள் தெரிவித்துவிட்டனர். |
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen