.சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது.

ஜூலை 04,2012 சாத்தூர்: சாத்தூர் வெங்கடாஜலபதி கோயில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. சாத்தூரப்பன் என்ற வெங்கடாஜலபதி கோயில் ஆனிபிரம்மோற்சவ திருவிழா ஜூன் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.12 நாள் விழாவில் சுவாமி தினமும் பல்வேறு வாகனங்களில் நகர் வலம் வந்து அருள் பாலித்தார்.நேற்று காலை 8மணிக்கு சுவாமி வெங்கடாஜலபதி,ஸ்ரீதேவி, பூதேவி, சமேதரராய் தேரில் எழுந்தருளினார். காலை 10.50 மணிக்கு ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ., வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். சாத்தூர் சுற்று கிராமபகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு நேர்த்திகடன்களை செலுத்தி வெங்கடாஜலபதியை வழிபட்டனர். தேர் மதியம் 1.30 மணிக்கு நிலையை அடைந்தது.இவ்விழாவில் மாவட்ட ஊராட்சித்தலைவர் வசந்தா, ஒன்றியக்குழுதலைவர் வேலாயுதம், துணைத்தலைவர் செல்வராணி, சாத்தூர் நகராட்சித்தலைவர் டெய்சிராணி, துணைத்தலைவர் கிருஷ்ணன்,மாவட்டக்கவுன்சிலர் சுப்புராம், தொகுதி கழக செயலாளர் சேதுராமானுஜம், நகர கழக செயலாளர் என்.எஸ்.வாசன்,கோயில் தக்கார் பூவலிங்கம், நிர்வாக அதிகாரி சுவர்ணாம்பாள், இருக்கன்குடி கோயில் உதவி ஆணையர் மாரிமுத்து கலந்து கொண்டனர். சின்னையா டி.எஸ்.பி., தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.