26.07.2012.
நயினையில் குடிகொண்ட நாயகியே உன்னை
நாடிவந்தார் குறை இன்னுமுண்டா
அலைகடல் தாண்டிவந்தார் அருள் பெற்றார் உன்
... அடியினைப் பணிந்தவர் பலன்கண்டார்
சூரனைக் கொல்லவொரு வேல்கொடுத்தாய் நயினை
மக்களைக் காப்பதற்குன் தேர்கொடுத்தாய்
உன் இரு மைந்தர்களின் சொந்தமது
உன்மக்கள் உனைப் பணிந்தோர் உண்மையிது
கைலைமலையில் நல்ல காட்சி கொடுப்பவள்
கைலைநாதருடன் காஞ்சியில் இருப்பவள்
நாகம்மை என்னும் நல்ல நாமத்தை உடையவள்
நாடிடும் அடியவர்க்கு நல்லருளைக் கொடுப்பவள்
ஏழ்கடல் நடுவினிலே ஆழ்கின்ற உமயவள்தான்
எங்களைக் காப்பதற்கே வந்துதித்த தாயவள்தான்
ஐந்து தலைநாகம் அதனுள் இருப்பவள்தான்
அண்டங்கள் அனைத்துக்கும் அகிலாண்ட நாயகி
நயினையில் குடிகொண்ட நாயகியே உன்னை
நாடிவந்தார் குறை இன்னுமுண்டா
அலைகடல் தாண்டிவந்தார் அருள் பெற்றார் உன்
... அடியினைப் பணிந்தவர் பலன்கண்டார்
சூரனைக் கொல்லவொரு வேல்கொடுத்தாய் நயினை
மக்களைக் காப்பதற்குன் தேர்கொடுத்தாய்
உன் இரு மைந்தர்களின் சொந்தமது
உன்மக்கள் உனைப் பணிந்தோர் உண்மையிது
கைலைமலையில் நல்ல காட்சி கொடுப்பவள்
கைலைநாதருடன் காஞ்சியில் இருப்பவள்
நாகம்மை என்னும் நல்ல நாமத்தை உடையவள்
நாடிடும் அடியவர்க்கு நல்லருளைக் கொடுப்பவள்
ஏழ்கடல் நடுவினிலே ஆழ்கின்ற உமயவள்தான்
எங்களைக் காப்பதற்கே வந்துதித்த தாயவள்தான்
ஐந்து தலைநாகம் அதனுள் இருப்பவள்தான்
அண்டங்கள் அனைத்துக்கும் அகிலாண்ட நாயகி
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen