27.07.2012 சுமங்கலிப் பெண்கள் கடைபிடிக்கும் வரலட்சுமி விரதம் மேற்கொண்டால் மாங்கல்ய பாக்கியம் நிலைத்துஇருக்கும். தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும்
* நாராயணனின் மார்பில் வீற்றிருக்கும் லட்சுமித்தாயே! செல்வத்தை வாரி வழங்குபவளே! நன்மைக்கு இருப்பிடமாய் திகழ்பவளே! உன்னுடைய கடைக்கண்ணால் எங்களுக்கு அருளை வாரி வழங்குவாயாக.
* கருநெய்தல் மலர் போல அழகு மிக்க கண்களை உடையவளே! அரச பதவியும், இந்திர பதவியும் வழங்குபவளே! உன் பார்வையால் எங்கள் வாழ்வு வளம் பெறட்டும்.
* தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளே! எங்கள் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பாயாக. பார்க்கவ முனிவரின் மகளாக அவதரித்தவளே! திருமாலின் மார்பில் மின்னல் கொடியாய் விளங்குபவளே! உன்னருளால் எங்கள் எண்ணம் நிறைவேறட்டும்.
* கடலரசனின் மகளே! எல்லா வளங்களையும் ஒருசேர அருள்பவளே! உன் கடைக்கண் பார்வை எங்கள் மீது பரவட்டும். ஆளுகின்ற தலைமைப் பதவியும், விரும்பிய பொருள் வளமும் எங்களை வந்து அடையட்டும்.
* நாராயணனின் துணைவியே! கார்மேகம் போன்ற அருட் கண்களால் எங்கள் இல்லங்களில் செல்வ மழை பொழியச் செய்வாயாக.
* நாமகளாய் கல்வியையும், பூமகளாய் செல்வத்தையும், மலைமகளாய் வீரத்தையும் வழங்கும் தாயே! நல்ல செயல்களுக்குரிய நற்பலனை வழங்கும் வேத நாயகியே! உன்னை அடிபணிந்து வணங்குகிறோம்.
* தாமரை முகம் கொண்டவளே! சந்திரன், அமுதம் இவற்றோடு பிறந்தவளே! உயிர்களை காப்பவளே! தாமோதரனின் துணை வியே! முப்பத்து முக்கோடி தேவர்களால் வணங்கப்படுபவளே! உன்னை வாழ்த்தி வணங்குகிறோம்.
* மனதிற்கு இனியவளே! ஆடை, ஆபரணங்களைச் சூடி மகிழ்பவளே! நறுமணம் கமழ்பவளே! உன் அருளுக்குத் தகுதியான எங்களுக்கு மஞ்சள், குங்குமம் நிலைத்திருக்க அருள்
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen