கொழும்பு யாழ்ப்பாண வழித்தடத்தில் அனுமதிப் பத்திரமின்றி 50 தனியார் பேரூந்துகள் சேவையில்

09.08.2012.
news
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே சுமார் 50 தனியார் பேரூந்துகள் அனுமதிப் பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபட்டுவருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ரோஷன் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளதை நிலையில் அவர் இக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் அனுமதிப் பத்திரமின்றி 70 பேரூந்துகள் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் ஆணைக்குழு தீர்மானத்தை அடுத்து தற்போது அப் பேரூந்துகளின் எண்ணிக்கை ஐம்பதாகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடுவதை தடுப்பதற்கான அமைச்சரவை பத்திரமொன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து அனுமதிப்பத்திரமின்றி போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.

அவ்வாறு போக்குவரத்தில் ஈடுபடும் தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு இரண்டரை இலட்சம் ரூபா அபராதமும் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.