வாகனவிபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட எண்மர் காயம்

02.08.2012.
news
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவ - ஹொரகொல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 8 பேர் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை வான் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் பாடசாலை மாணவர்கள் 6 பேரும் இரு சாரதிகளும் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வத்துபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஒரு பாடசாலை மாணவி மேலதிக சிகிச்சைகளுக்கென கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.