23.08.2012.கொழும்பு தேசிய நூதனசாலையில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க சில பொருட்கள்
திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவர்
பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மாளிகாவத்தைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து நூதனசாலையிலிருந்து திருடப்பட்ட மாணிக்கம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மார்ச் 16ஆம் திகதி நள்ளிரவன்று நூற்றாண்டுகள் பழமையான வாள்களும் நாணயங்களும் அடங்கலாக விலை மதிப்பற்ற பல பொருட்கள் இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெண்கள் இருவர் உட்பட 3 பேரை பிலியந்தல பகுதியில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen