வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா

 


சீப்பான பொருட்களுக்கு எப்பவுமே மவுசு கம்மிதான். அதே கதைதான் வாழைப்பழத்துக்கும். வெறும் 2 ரூபாய்தானே என நாம் நினைக்கும் வாழைப்பழத்துக்குள்ளேயும் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு.

நாட்டின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் 25 சதவீதம் தமிழகத்தின் பங்கு உள்ளது. இந்தளவிற்கு உற்பத்தி இருந்தாலும் நமக்கு பெரியதாக பயன் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம்... வாழைப்பழங்கள் மிக குறுகிய நாட்களில் பழுத்துவிடும் என்பதும், அதற்குமேல் அதை
பாதுகாத்து மீண்டும் உபயோகப்படுத்தும் அளவிற்கு தேவையான குளிர்சாதன வசதிகள் ஏதும் இல்லாததுதான்.

இதையே முறையான குளிரூட்டல் மூலம் வாழைப்பழத்தை பாதுகாத்து ஏற்றுமதி செய்தால், மாநிலத்தின் மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.6000
கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதுபோன்று காய்கறி மற்றும் பழங்களை பாதுகாக்கும் வசதி இல்லாததால் மார்கெட்டுக்கு விற்பனைக்காக வருவதற்கு முன்பே அழுகி விடுகின்றன.

ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சின்ன லிஸ்ட்... நீர்ச்சத்து 61.4 கிராம், சர்க்கரை 36.4கி, புரதம் 13கி, தாதுப்பொருள் 0.7 மி.கிராம், கால்சியம் 17 மி.கி, இரும்பு 0.04 மைக்ரோ கிராம், மக்னீசியம் 41 மைக்ரோ கிராம், பாஸ்பரஸ் 36 மி.கி, சோடியம் 366 கி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, கலோரி 124

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.