இரண்டே வயதான செர்வின் ஷார்பி எனும் சிறுவன் உலகிலுள்ள அத்தனை நாடுகளையும் பட்டியலிடுவதுடன், அவற்றை இனங்காணும் ஆற்றலையும் கொண்டுள்ளதனால் வைத்தியர்கள் அசந்துபோயுள்ளனர்.
ஏற்கெனவே வாசிக்கும் ஆற்றலைக் கொண்டிருந்த குறித்த சிறுவன் பரிசாக வழங்கப்பட்ட ஐ பேட்டின் உதவியுடன் 18 மாதங்களில் இந்த ஆற்றலைப் பெற்றுள்ளான்.
மேலும் இவைத் தவிர உலகளாவிய ரீதியில் காணப்படும் எரிமலைகள், மற்றும் எரிநட்சத்திரங்கள் தொடர்பான விபரங்களையும் ஒப்புவிக்கும் வல்லமை படைத்தவனாகத் திகழ்கின்றான் இந்த சுட்டிப்பையன்.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen