16 அடி உயர சுரங்கப் பாதை லிந்துலையில் கண்டுபிடிப்பு

1909.2012.By.Rajah
நுவரெலியா ஹற்றன் பிரதான வீதியின் தலவாக்கலை லிந்துலை பகுதியில் 10 அடி உயரமான சுரங்கப்பாதை ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா ஹற்றன் வீதி புனரமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பெக்கோ இயந்திரம் கொண்டு மலைப் பகுதி ஒன்றை வெட்டியபொழுது லிந்துலை பெயார்வெல் தோட்டத்துக்கு அண்மையில் இந்தச் சுரங்கப்பாதை வெளிப்பட்டுள்ளது.
இதனைப் பார்வையிட்ட தொல்பொருளியல் அதிகாரிகள் இந்த பாதை 3 திசைகளுக்குப் பிரிந்து செல்வதாக தெரிவித்தனர். இந்தச் சுரங்கப்பாதை தொல்பொருளியல் பெறுமதி வாய்ந்த ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொல்பொருளியல் மற்றும் புவிச் சரிதவியலாளர்களைக் கொண்டு பரிசோதனைகளை நடத்தும் வரை தற்காலிகமாக மண் போட்டு மூடப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.