
04.09.2012.BY.rajah.சுவிட்சர்லாந்தில் பேசெல்லில் உள்ள பொருளியல் அறிஞர்கள் நடத்திய ஆய்வில் ஓய்வு
பெறும் வயதை 67ஆக உயர்த்த வேண்டும் என்பதை பொது மக்கள் விரும்புவதாக
தெரிவித்துள்ளனர்.
கடந்த 1942ம் ஆண்டு முதல் 1973 ஆண்டு வரை அதிகரித்த குழந்தை பிறப்பும், வாழ்நாள்
அதிகரிப்பும், புலம்பெயர்வும், குழந்தை பிறப்பில் ஏற்பட்ட வீழ்ச்சியும் சேர்ந்து
2010 முதல் 2060 வரையிலான ஓய்வூதிய நிதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2015 முதல் 2018க்குள், ஓய்வூதியம் வழங்க அதிக நிதி தேவைப்படுவதால்
மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தி, பணியாளர் பங்களிப்பு மூலமாகவே இந் நிதி
திரட்டப்படும்.
அரசு ஓய்வூதிய நிதியைப் பெருக்க வேறு பல வழிமுறைகளையும் ஆலோசித்து வருகிறது.
ஓய்வூதிய வயதை உயர்த்துதல், சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்தல், உடனடியாக கூடுதல்
வரி விதித்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயது 2019ம் ஆண்டில் 66 என்றும் 2050ம் ஆண்டில் 70 என்றும்
உயர்த்தப்படும்

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen