நோவா ஸ்கோஷியாவில் கடும் வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

12.09.2012.By.Rajah.கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று மட்டும் 75 மி.மீ அளவுக்கு மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இன்று காலை நியுஃபவுண்ட்லேண்டை இந்த புயல் தாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு புயல்காற்று இணைந்து வீசுவதால் இன்றிரவு நிலைமை மிகவும் மோசமடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நோவா ஸ்கோஷியாவின் முதல்வர் டேரல் டெக்ஸ்ட்டர் கூறுகையில், டுரூரோ மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பது தான் எங்களின் தலையாய பணி என்றார்.
டுரூரோவின் சட்டசபை உறுப்பினரான லெனோர் ஜானும், அவசர கால மேலாண்மைத் துறையின் அமைச்சரான ராஸ் லேண்ட்ரியும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
சாலைகளையும், பாலத்தையும் பொறியாளர் சோதனை செய்து வருகின்றனர். விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும் என்றனர்.
வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.