06.09.2012.by.rajah.உலகளாவிய ரீதியில் பல வகைப்பட மதங்கள் மனித வாழ்க்கையுடன் ஒன்றி வளம்பெற்று வந்துள்ளன. மனிதனுக்கு அறநெறிக் கொள்கைகளைப் புகட்டி மனித வாழ்க்கையை வழிநடத்தும் ஆன்மீக ஈடேற்ற மார்க்கமே மதம் எனச் குறிப்பிடுவர். தனித்துவக் கொள்கைகளை சமத்துவ, மனிதநேயப் பண்புகளைத் தத்துவார்த்த சிந்தனை, உணர்வுகளை, மனித மனதில் விதைத்து வளர்க்கும் பண்பாட்டியலே மதம் அல்லது மார்க்கம் என விளங்கிக் கொள்ளல் இன்றியமையாததாகும். பொதுவாக எந்த ஒரு மதமும், அன்பு, அகிம்சை, ஆன்மீகம் ஆகிய நற்பண்புகளை மக்களிடையே ஊட்டி வளர்க்கின்றது என்பதில் ஐயமில்லை. எந்த மதமும் அவற்றுக்கென தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட வழிபாட்டுத், தலத்தை மையமாகக் கொண்டு மிளிர்கின்றது.
ஒவ்வொரு மத வழிபாட்டுத் தலமும் தனித்துவமான கட்டிடக் கலை வடிவம் செறிந்த கட்டுமான கலைத்துவம் மிக்கதாக விளங்குகின்றது. அத்தகைய வழிபாட்டுத் தலங்களை நாம் பார்த்த போதிலேயே அவை எம்மதம் சார் வழிபாட்டுத் தலம் என்பதினை இலகுவில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.
இந்த வகையில் உலகளாவிய ரீதியில், இந்து மதக் கோயில்களாவன ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பைச் சாஸ்திரீக, சம்பிரதாய, சமயப் பண்பாட்டு விழுமியப் பின்னணிகளுடன் கொண்டு விளங்குகின்றன. இந்து மதமானது அடிப்படையில் சைவம், வைணவம் ஆகிய இரு முக்கிய கூறுகளாக வகுத்துக் கணிக்கப்பட்ட போதும் இந்து கோயில்கள் யாவும் ஏறத்தாழ ஒரே மாதிரியான கட்டமைப்பு வடிவமைப்பைக் கொண்டு விளங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சைவமும் வைணவமும் அடிப்படையில் பல தனித்துவ நிலைப்பாட்டைக் கொண்டு விளங்கிய போதும் கலைத்துவ உட்கட்டமைப்பு, வெளிகட்டமைப்பு, உள்வீதி, வெளிவீதி என்பன பொது நிலைப்பாட்டில் ஒன்றே. இந்து மதத்தின் பிறப்புப் பூமியான இந்தியா முழுவதிலும் ஏராளமான இந்து திருத்தலங்கள் செறிந்து காணப்படுகின்றன. ஆயினும் அடிப்படையில் இந்துக் கோயில் கட்டமைப்பானது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இக்கட்டமைப்பு மாறுபாட்டினை பெரிதும் உட்கட்டமைப்பிலும் வெளி கட்டமைப்பிலும் காணமுடிகின்றது.
எது எவ்வாறாயினும் இலங்கையின் இந்து மதக் கோயில் கட்டமைப்பானது, பெரிதும் தமிழ் நாடு, மற்றும் ஆந்திரா மாநிலக் கோயில் கட்டமைப்பினை ஆதாரமாகக் கொண்டு விளங்குகின்றன. இந்த வகையில் இன்று பெரும்பாலான திருத்தலங்கள் அவற்றின் முகப்பு நுழைவாயிலினை அடித்தளமாகக் கொண்டே இதன் மேல் பல தளங்களால் அமையப்பெற்ற பாரிய கண்கவர் உயர் கோபுர வடிவங்களை நாம் காணமுடிகின்றது.
இலங்கையின் இந்து ஆலயங்களின் கோபுரங்கள் பெரிதும் இந்திய ஆலயங்களை ஒத்ததாகக் காணப்பட்டபோதும் ஒப்பீடு அடிப்படையில் உயரத்தில் இலங்கை இந்து ஆலயங்களின் ஒட்டுமொத்தத் தளங்கள் அடித்தளப்பரப்பு விஸ்தீரணம், கோபுர உயரம் ஆகியன சற்று சிறியவையாகவே காணப்படுகின்றன. இந்து மதத்தில் தூரத்தே தென்படும் கோபுரம் "தூலிங்கம்' எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுகின்றது.
இலங்கையின் இந்துமதக் கோயில்களாவன பெரும்பாலும் சோழ சாம்ராச்சியம், பாண்டிய மன்னர் ஆட்சிக்காலம், மற்றும் நாயக்க மன்னர் ஆட்சிக் காலத்தின் தொடர்ச்சியாக விளங்குகின்றன என்றால் அது மிகையாகாது.ஆலயங்களாவன பல வகையான சமூகப் பணிகளை மேற்கொள்ளும் கேந்திர ஸ்தனமாகவும், கலை வளர்ச்சிக் களங்களாகவும், ஆன்மீக மேம்பட்டு மையங்களாகவும், அரும்பணியாற்றி வருகின்றன. பொதுவாக ஆலயம் என்னும் பதமானது மனதை ஒன்று படுத்தி ஆன்மீக ஈடேற்றத்துக்கு அருள்பாலிக்கும் இடம் எனப் பெயர் பெற்றது என வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
பண்டையகால இந்து மத வரலாற்றுச் சுவடுகளை எடுத்து நோக்கும்போது மனிதன் இறைவனை மரங்களுக்கு கீழும், ஆற்றுப் படுக்கைகளை அண்டிய பகுதிகளிலும், குளக்கரைகளுக்கு அருகாமையிலும், குகைக்கு உள்ளும், குன்றின் மேலும், சிறு அளவிலான கோயில்களை அமைத்து வழிபாடுகளை மேற்கொண்டதாக அறிகின்றோம்.இவ்வாறு சிறிய வகையில் அமைக்கப்பெற்ற தலங்கள் காலக்கிரமத்தில் மரத்தாலும் சுண்ணாம்பாலும் செங்கற்களாலும் திருத்தலங்களாக அமைக்கப்பட்டு வழிபடப்பட்டன. இந்து கோயில் அமைப்பானது மனித உடலை ஒத்த அடிப்படையில் தத்துவார்த்த ரீதியில் அமைக்கப்பட்டது என்பது கருத்தாகும்.
காலக்கிரமத்தில் கற்களே ஆலயத்தை அமைக்க அடிப்படை ஊடகமாக மிளிந்தன. அவற்றுள் முக்கிய பங்கேற்ற கற்கள் கருங்கற்களாகும். இந்து ஆலய கோபுரங்களாவன கம்பீரமிக்க கண்கவர் சிற்ப வேலைப்பாடுகள் மிக்கவையாக விளங்குகின்றன.கோபுர வரலாற்றுப் பின்னணியினை எடுத்து நோக்கும் போது நாம் சில அடிப்படை சாதாரண முடிவுகளுக்கு வரமுடிகின்றது. கி.பி 7 ஆம் அல்லது 8 ஆம் நூற்றாண்டுக்கு முன்பே அரிய பல கோபுரங்கள் கட்டப்பட்டமையை நாம் காண முடிகின்றது. இதற்கான ஆதாரத்தினை சங்க இலக்கிய நூல்களிலும், கல்வெட்டுகளிலும் மற்றும் பக்தி இலக்கியங்கள் ஊடாகவும் அறிய முடிகின்றது.
அடிப்படையில் பருத்து விரிந்த அமைப்பைக் கொண்டு விளங்கும் கோபுர அடித்தளம் எவ்வளவு பரந்து காணப்படுகின்றதோ அவ்வளவிற்கு அதன் உயரம் சற்றுக் குறைவானதாகவே காணப்படும் என்பதினை பல வகைப்பட்ட கோபுரங்களை நாம் ஒப்பு நோக்கும்போது கணிப்பிடமுடிகின்றது. சில கோபுர வடிவமைப்பானது மட்டுப்படுத்தப்பட்ட சதுர வடிவமைப்பைக் கொண்டவையாகக் காணப்படுகின்றன. இத்தகைய மட்டுப்படுத்தப்பட்ட சதுர வடிவமைப்பைக் கொண்ட அடித்தளத்தை அத்திவாரமாகக் கொண்டு விளங்கும் கோயில்களின் கோபுரம் உயர்ந்தவையாக் காணப்படுவது வழமையாகும். அத்துடன் எவ்வழிபாட்டு தெய்வத்தினை மூலமூர்த்தியாகக் கொண்டு விளங்குகின்றதோ அக்குறிப்பிட்ட மூல மூர்த்தியினைப் பற்றியதான திருவிளையாடல் குறிப்புகள், புராண இதிகாச வரலாற்றுக் குறிப்புகள், ஆகியவை நிறைந்த கலையம்ச சிற்பங்கள் அக்கோயிலின் கோபுரங்களை அலங்கரிப்பதை நாம் பொதுவாக காணமுடிகின்றது.
இத்தகைய சிற்பங்களை இந்தியக் கோயில் கோபுரங்களில் நாம் பெரிதும் அன்றும், இன்றும், காண முடிகின்றது. தமிழகக் கோயில்களில் பெரும்பாலானவை உயரிய சிற்ப வேலைபாடுகளைத் தாங்கியவையாக விளங்குகின்றன. ஆயினும் தமிழகம் சிற்பக் கோபுரக் கலை வனப்புக்கு முக்கிய இடம் கொடுப்பதை நாம் காண முடிகின்றது. குறிப்பாகச் சிதம்பரம், வில்லிபுத்தூர் ஆழ்வார் திருக்கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், மைலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில் என்பன அவற்றுள் சிலவாகும். சில கோயில்களில் கோபுரங்களிலும் பார்க்க முக்கியமானவையாக விளங்குபவை விமானங்களாகும். விமானம் எனக் குறிப்பிட்டு அழைக்கப்படுவது கோயில் கர்ப்பக்கிருகத்துக்கு மேல் கட்டப்பட்டுள்ள அமைப்பாகும். ஒட்டுமொத்தமாக கோபுரக் கட்டமைப்பையும் விமான கட்டமைப்பையும் எடுத்து நோக்குகையில் கட்டமைப்பில் மாற்றம் காணப்படும். விமானக் கட்டமைப்பானது பொதுவாக சிற்பங்கள் அற்ற வட்ட வடிவமானவையாக விளங்குகின்றன.
சில திருத்தலங்களில் முற்காலத்தில் வாயில் முகப்புக் கோபுர உயரத்திலும் பார்க்க கர்ப்பக்கிருகத்துக்கு மேல் அமைக்கப் பெற்ற விமானமே முக்கிய இடம்பெற்று விளங்குகின்றது. அதாவது விமானத்தின் உயரம் கூடியதாகவும் கோபுரத்தின் உயரம் குறைந்ததாகவும் காணப்பட்டன. அத்தகைய கட்டிட அம்சத்தை தற்போதைய கோயில்களில் காண்பது அரிதே.சிவனாலயங்களில் சிவனின் திருவிளையாடல் குறிப்புகள் அடங்கிய சிற்பங்களும், அம்பாள் ஆலயங்களில் அம்பாள் கதைகளை விவரிக்கும் சிற்பங்களும், விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணு புராண வரலாறுகளை விபரிக்கும் சிற்பங்களும் மிகையாக உள்ளதான கோபுரங்களை நாம் காணமுடிகின்றது.
இத்தகைய அரிய சிற்பவேலைப்பாடுகள் செறிந்த கோபுரங்களைப் பெரிதும் தென்னிந்தியாவிலே காண முடிகின்றது என்பதை முன்னரும் குறிப்பிட்டோம். ஆயினும் ஏனைய மாநிலங்களான ஒரிசா, மணிப்பூர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற வட இந்திய மாநிலங்களின் இந்து கோபுர அமைப்பு சற்று மாறுபட்டதாகக் காணப்படுகின்றது. அவ்வாறே புத்தகயா பௌத்த புனிதத் திருத்தல கோபுர அமைப்பு சதுர வடிவிலான அரிய சிற்பவேலைப்பாடுகள் செறிந்தாக காணப்படுகின்றன

![]()

0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen