விக்கிபீடியா ஆக்கங்களை இணைத்து மின் புத்தகமாக மாற்றுவதற்கு

20.09.2012.By.Lovi.விக்கிபீடியாவிலுள்ள விடயங்களை பிடிஎஃப் கோப்பாக மாற்றிவிட பல்வேறு வசதிகள் உள்ளன. தற்போது பல விக்கிப்பீடியா ஆக்கங்களை இணைத்து ஒரு மின்புத்தகமாக மாற்றலாம்.
இணைய இணைப்புக்கள் இல்லாத சந்தர்ப்பத்தில் அல்லது பிரிண்ட் செய்து கொள்ள வசதியாகவும், மொபைல் டிவைஸ்களில் படிப்பதற்காகவும் விக்கிபீடியா ஆக்கங்கள் பலவற்றை இணைத்து மின்புத்தக்கமாக உருவாக்கிவிடலாம்.
மின்புத்தகத்தை உருவாக்குவதற்கு முதலில் மின்புத்தக்க ஆப்ஸனை விக்கிபீடியாவில் செயற்படுத்த வேண்டும்.
இதற்கு இந்த இணைப்புக்கு செல்லுங்கள் - http://en.wikipedia.org/wiki/Main_Page
அல்லது வலது பக்கத்தில் அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு என்பதை அழுத்துங்கள்.
பின்னர் Add this page to your book அல்லது உங்கள் புத்தகத்தில் இப்பக்கத்தைச் சேர்க்கவும் என்பதை அழுத்துங்கள்.
நீங்கள் விரும்பிய பக்கங்களை தெரிவு செய்த பின்னர் தலைப்பை வழங்க விரும்பும் போர்மட்டில் தரவிறக்கம் செய்யலாம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.