| 11.09.2012.By.Rjah.உயிர்க்கொல்லி நோய்களில் ஒன்றான
புற்றுநோயை கட்டுப்படுத்த பல ஆய்வுகள் நடந்த போதிலும், இந்நோயை முழுமையாக
குணப்படுத்த இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போதைய ஆய்வில், வைட்டமின் ஏ சத்து புற்றுநோயை குணப்படுத்தும் என
கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றி ஆய்வு நடத்தி யார்க்சயர் புற்றுநோய் ஆராய்ச்சி மைய பேராசிரியர் நார்மன் மைட்லாண்ட் கூறுகையில், புற்றுநோயை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிப்பது மாலிங்னட் எனப்படும் செல்களாகும். இதன் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் திறன் வைட்டமின் ஏ- க்கு இருப்பது தெரியவந்துள்ளது. எனவே இந்த வைட்டமின் ஏ- யை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தலாம். இதை உணவுச் சத்துக்காகவும் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றாட உணவில் வைட்டமின் ஏ சத்து அதிகமுள்ள மீன், கேரட், கல்லீரல், சிவப்பு மிளகு, காய்கறிகள் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம். அதற்காக அதிக அளவு வைட்டமின் ஏ மாத்திரைகளை சாப்பிடுவது சரியான முறையல்ல என்று தெரிவித்துள்ளார் |
![]()


0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen