தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்

18.09.2012.By.Rajah.

Zum vollständigen Artikel wechseln


பழமொழி - 43
*************
ஆவிற் கரும்பனி தாங்கிய மாலையும்
கோவிற்குக் கோவல னென்றுலகம் கூறுமால்
தேவர்க்கு மக்கட் கெனல்வேண்டா தீங்குரைக்கும்
நாவிற்கு நல்குரவு இல்.

பசுக்கூட்டங்களுக்கு வந்த அரிய துன்பத்தைப் போக்கிய திருமாலை ஆநிரைகளுக்குத் தக்க இடையன் என்று உலகம் சொல்லும். ஆகையால், தீமையை எடுத்துக்கூறும் நாவினுக்கு வறுமை இல்லாததால் தேவர்க்கு(உயர்ந்தோருக்கு) உரைப்பது இது; மக்கட்கு (தாழ்ந்தோருக்கு) உரைப்பது இது என்பது வேண்டாம்.
பழித்துரைக்கப் போவாருக்கு உயர்ந்தோர் தாழ்ந்தோர் இல்லையாம்.
பழமொழி: “தீங்குரைக்கும் நாவிற்கு நல்குரவு இல்.”

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.