01.10.2012.By.Rajah.Appendicitis எனப்படும் குடல்
வால்வு பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வாக உள்ள நிலையில் மருந்து மூலம்
குணப்படுத்த முடியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த கோதன்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜென்னட்
ஹான்சன் தலைமையில் Appendicitis குறித்த ஆய்வு தொடர்ந்து நடந்து வருகிறது. இதுகுறித்து ஜென்னட் கூறுகையில், பெருங்குடலின் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சிறு டியூப் வடிவில் பை போன்ற அமைப்பே Appendicitis எனப்படுகிறது. இதில் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் தாங்க முடியாத வயிற்று வலி, வாந்தி ஏற்படும். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் இப்பகுதியை வெட்டி நீக்கினால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாகவும் முடியும். ஆனால், பலர் அறுவை சிகிச்சை செய்து கொள்ள பயப்படுகின்றனர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறோம். அதற்கு பலனாக வலியில்லா நிரந்தர தீர்வுக்கு வழி காணப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்வதை காட்டிலும் Antibiotic மருந்துகள் மூலம் தீர்வு காணும் முறையை கண்டறிந்துள்ளோம். பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். பின்விளைவுகள், பக்க விளைவுகள் இருக்காது. பூரண குணம் உறுதியாகிறது. அறுவை சிகிச்சையை தாங்க முடியாதவர்கள் மற்றும் முதியோர்களுக்கு இம்முறை பெரிய வரப்பிரசாதம். வலியற்ற இந்த முறை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. விரைவில் அறிமுகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார் |
Appendicitis பிரச்னையா? மருந்து மூலம் குணப்படுத்தலாம்: சுவீடன் ஆய்வாளர்கள்
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen