01.10.2012.By.Rajah.தற்போது நீரிழிவு நோய் முதியவர்கள்
உட்பட இளைஞர்களையும் அதிகளவு தாக்குகிறது. எனவே அந்நோயை தடுக்க பல்வேறு
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிட்ஸ்பர்க் பல்கலைகழகத்தை சேர்ந்த நிபுணர்கள் 245 இளைஞர்களிடம் ஆய்வு
மேற்கொண்டனர். இளைஞர்களை சராசரியாக நாள் ஒன்றுக்கு 6 மணிநேரம் தூங்க வைத்தும், அதற்கு குறைவான நேரம் உறங்க வைத்தும் ஆராய்ச்சி செய்தனர். இதில் நீண்ட நேரம் தூங்கும் நபர்களை நீரிழிவு நோய் தாக்காது என கண்டறிந்துள்ளனர். இதற்கு காரணம் அவர்களது உடலில் இன்சுலின் குறைந்த அளவே சுரக்கின்றது. ஆய்வு குறித்து தலைவர் கரீன் மேத்யூஸ் கூறுகையில், பொதுவாக இளைஞர்கள் இரவில் 6 மணி நேரம் தூங்குகின்றனர். அதன் மூலம் இன்சுலின் சுரப்பது 9 சதவிகிதம் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே நீண்ட நேரம் தூங்குபவர்கள் எதிர்காலத்தில் நீரிழிவு நோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியும் என தெரிவித்துள்ளனர் |
நீண்ட நேரம் தூங்கினால் நீரிழிவு நோய் ஏற்படாது: ஆய்வில் தகவல்
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen