சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012,By.Lovi. |
உலகளவில்
அதிகளவான பேர் மூட்டு வலிகளால் தான் அதிகம் அவஸ்தைக்குள்ளாகின்றனர். இத்தகைய மூட்டு
வலிகள் பெரும்பாலும் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஏற்படுகிறது.
பெரும்பாலும் மூட்டு வலிகள் வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை சரியான
ஊட்டச்சத்தில்லாத உணவுகள், போதிய கால்சியம் உடலில் இல்லாதது, உடற்பயிற்சி, உடல்
எடையை சரியான அளவில் வைக்காமல் இருப்பது, உடலில் தண்ணீர் பற்றாக்குறை போன்றவை. இதனால் ஏதாவது அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் போதும், தோள்பட்டை, முழங்கை, முழங்கால், கழுத்து, இடுப்பு போன்றவற்றில் வலிகள் அல்லது சுளுக்குகள் வந்து பெரும் தொந்தரவை ஏற்படுத்திவிடும். ஆகவே இத்தகைய இடங்களில் வலிகள் ஏற்படாமல் இருக்க, ஒரு சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சாலமன் கடல் உணவுகளில் அதிகமான அளவில் ஒமேகா-3 உள்ளது. அதிலும் சாலமன் மீனில் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. ஆகவே இதனை அடிக்கடி உண்ணும் உணவில் சேர்த்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலிகள் குறைந்து, சரியாகிவிடும். பெர்ரிஸ் ஸ்ட்ராபெர்ரி மற்றும் ப்ளுபெர்ரிகள் மருத்துவ குணம் நிறைந்த பழங்கள். அதிலும் இவை மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு சிறந்தது என்று அமெரிக்கன் கல்லூரியில் உள்ள நியூட்ரிசன் டிபார்ட்மெண்ட் மேற்கொண்ட ஆய்வில் தெரிவித்துள்ளது. ஏனெனில் அவற்றில் மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் புண்களை சரிசெய்யுமளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. காய்கறிகள் உடலில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் குறைவாக இருந்தால், மூட்டு வலிகள் ஏற்படும். ஆகவே அவற்றை சரிசெய்ய அதிக அளவில் காய்கறிகளான கீரை, ப்ராக்கோலி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை சாப்பிட வேண்டும். மேலும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளான பாஸ்தா, பிரட், ஜங்க் ஃபுட் போன்றவற்றை தவிர்த்தால், மூட்டு வலிகள் ஏற்படாமல் தடுக்கலாம். நட்ஸ் பாதாம், வால்நட் மற்றும் மற்ற விதைகளான பூசணிக்காய் விதை போன்றவற்றை சாப்பிட்டால் நல்லது. ஏனெனில் இவற்றில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இதனால் மூட்டுகளில் ஏற்படும் புண் மற்றும் வலிகள் போன்றவை நீங்கும். ஆகவே இனிமேல் ஜங்க் ஃபுட்களை சாப்பிடுவதை தவிர்த்து, இவற்றை சாப்பிடுவதை தொடங்குங்கள். பால் பொருட்கள் உடலில் எலும்புகள் நன்கு ஆரோக்கியத்துடன் இருக்க கால்சியம் சத்துக்கள் இருக்க வேண்டும். அவை குறைவாக இருந்தால் அடிக்கடி எலும்புகளில் வலிகள், சுளுக்குகள் ஏற்படும். ஆகவே அத்தகைய வலிகள் வராமல் இருக்க பால் பொருட்களான வெண்ணெய், பால், சீஸ் போன்றவைகளை அதிகம் உடலில் சேர்க்க வேண்டும். அதிலும் ஸ்கிம் மில்க்கை சாப்பிட்டால், உடல் எடையை அதிகரிக்காமலும், உடலில் நீரிழிவு ஏற்படாமலும் தடுக்கலாம். ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயிலின் மகிமைகளை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவு அதில் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. ஆகவே சமைக்கும் போது மற்ற எண்ணெய்களை பயன்படுத்துவதை விட, ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தி சமைத்தால் இதயத்திற்கும், எலும்புகளுக்கும் நல்லது. ஏனெனில் இவற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகமாகவும், கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாகவும் உள்ளது. ஆரஞ்சு ஜூஸ் நிறைய ஆராய்ச்சியில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதோடு, எந்த ஒரு வலியும், புண்களும் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படாமல் இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதிலும் இந்த வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் அதிகமாக உள்ளது |
மூட்டு வலியை குறைக்கும் சத்தான உணவுகள்
Tags :
சுகாதார செய்திகள்
Abonnieren
Kommentare zum Post (Atom)
Powered by Blogger.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen