SlimCleane​r மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012.By.Lovi.
தற்போதைய தொழில்நுட்ப உலகில் கணனியின் பங்கானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இதனடிப்படையில் கணனிகளை தொடர்ச்சியாகப் பாவிக்கும் போது நாளடைவில் தற்காலிக கோப்புக்கள் மற்றும் ஏனைய அநாவசியமான கோப்புக்கள் தங்குவதனால் அவற்றின் செயற்திறன் பாதிக்கப்படுகின்றது.
எனவே இவ்வாறான கோப்புக்களை கணனியிலிருந்து நீக்கி மீண்டும் முன்னைய வேகத்துடன் இயங்க வைப்பதற்கு CCleaner போன்ற மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் தற்போது SlimCleaner எனும் புதிய மென்பொருளும் இணைந்துள்ளது.
இம்மென்பொருளானது ஏனைய மென்பொருட்களை விடவும் இலகுவானதும், பயனர் இடைமுகத்தினைக் கொண்டுள்ளதுடன் கணனியிலிருந்து மென்பொருட்களை முழுமையாக அகற்றுதல், வன்றட்டு தொடர்பான விபரங்களை காட்டுதல் மற்றும் Chrome, Firefox, Internet Explorer, Opera உலாவிகளுக்கான நீட்சிகளுடன் அவற்றினை சிறந்த செயற்பாடுடையதாக மாற்றியமைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள உதவுகின்றது.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.