திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஆருத்ரா உற்சவம்

 
டிசம்பர் 29,2012 புதுச்சேரியில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. லாஸ்பேட்டை: சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நேற்று காலை 5.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், 6.30 மணிக்கு மாணிக்க வாசகர் சுவாமிகளின் திருவெம்பாவை உற்சவமும், தீபாராதனை, பிரகார புறப்பாடு நடந்தது. பின், ஆருத்ரா தரிசனமும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் ஆறுமுகம், பன்னீர்செல்வம், செல்வராஜ், சோமசுந்தரம், நாட்டாண்மை முருகையன், பழனிவேலு, அர்ச்சகர்கள் வெங்கடேச குருக்கள், ராகவேந்திரா குருக்கள் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். வைத்திக்குப்பம்: அக்காசுவாமிகள் திருக்கோவிலில் நாராயணசுவாமிகளின் 108வது ஆண்டு குரு பூஜை விழா மற்றும் சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு ஆருத்ரா தரிசன மகா அபிஷேக விழா நேற்று முன் தினம் துவங்கியது. விழாவையொட்டி அன்று மாலை 5 மணிக்கு கணபதி பூஜையும், நடராஜப்பெருமானுக்கு வெள்ளைச்சாற்றுபடியில் மாடவீதியுலா நடந்தது. நேற்று காலை 4.30 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 6.30 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், 9 மணிக்கு நாராயணசுவாமிகளுக்கு சிறப்பு அபிஷே மும் நடந்தது. விழா ஏற்பாடுகளை அக்காசுவாமிகள் திருத்தொண்டு சபையினர் செய்திருந்தனர். காரைக்கால்: திருநள்ளார் சனிபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கும் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் கடந்த 10 நாட்களாக நடந்த ஆருத்ரா உற்சவம் நேற்று முடிந்தது. நிறைவு நாளான நேற்று காலை யாக பூஜைகள் நடத்தி, நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 9.30 மணிக்கு கோ பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 11.30 மணிக்கு நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின் ராஜகோபுர தீபாராதனையுடன் சுவாமிகள் 4 மாட வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நடராஜர் மற்றும் சிவகாமி அம்பாள் பிரம்ம தீர்த்த கரையில் எழுந்தருளி தீர்த்த வாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்து சுவாமிகள் கோவிலுக்கு செல்லும் வழியில் ஊடல் உற்சவமும், சுந்தரமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளி அம்பாளுக்கும், நடராஜருக்கும் சமாதானம் செய்யும் உற்சவம் நடந்தது. பின், நடராஜர் சிவகாமி அம்பாளுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தர்மபுர ஆதினம் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாக அதிகாரி ராஜராஜவீராசாமி உட்பட பலர் கலந்து

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.