புத்தாண்டு துவங்கியது எப்படி?

ஆண்டுதோறும் ஜன., 1ம் தேதி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆங்கில புத்தாண்டு என்று குறிப்பிடும் போதே, இது வெளிநாடுகளில் தான் ஆரம்பிக்கப்பட்டது என்று தெரிகிறது. ஜார்ஜியன் காலண்டர் தான் இன்று உலகின் பல நாடுகளிலும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த காலண்டரை பயன்படுத்தும் நாடுகளில் ஜன., 1 புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இது ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரின் திருத்தப்பட்ட வடிவம் எனவும் கூறப்படுகிறது. இக்காலண்டரின் படி ஜன., 1 முதல் டிச., 31ம் தேதி வரை ஓர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. ஆண்டின் தொடக்க நாள் புத்தாண்டு தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
10 மாதங்கள்: ஜார்ஜியன் காலண்டர் அறிமுகப்படுத்துவதற்கு முன், ஆரம்பகால ரோமானிய காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் என 10 மாதங்கள் தான் ஓர் ஆண்டாக கணக்கிடப்பட்டது. ஆண்டின் தொடக்க நாளாக மார்ச் 1ம், இறுதி நாளாக ஏப்., 31ம் இருந்தது. கி.மு., 153ம் ஆண்டு முதன் முதலாக ஜன., 1 புத்தாண்டாக மாறியது பின் கி.மு., 46ம் ஆண்டு ஜூலியஸ் சீசரின் ஜூலியன் காலண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் 12 மாதங்கள் சேர்க்கப்பட்டன. ஆனால் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்கள் வேறு பெயர்களில் இருந்தன. இதிலும் ஜன., 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்பட்டது. இருப்பினும் ஐரோப்பாவின் பல நாடுகளில் டிச., 25, மார்ச் 1, மார்ச் 25 என வெவ்வேறு தேதிகளில் புத்தாண்டு கடைபிடிக்கப்பட்டது.
உலக நாடுகள் ஏற்பு: பின் 1582ம் ஆண்டு ஜார்ஜியன் காலண்டர் வந்தது. இதன் பின் தான் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் சேர்க்கப்பட்டு 12 மாதங்கள் சேர்ந்தது ஓர் ஆண்டு என நிர்ணயிக்கப்பட்டது. மேலும் ஜன., 1 புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது. இதை பெரும்பாலான கத்தோலிக்க நாடுகளும் ஏற்றுக்கொண்டு, பின் பற்ற தொடங்கின. இருப்பினும் 1752 வரை பிரிட்டன், இக்காலண்டரை ஏற்றுக் கொள்ளவில்லை. இன்னும் சில அமெரிக்க குடியேற்ற நாடுகளில் மார்ச் 1 புத்தாண்டாக கடைபிடிக்கப்படுகிறது. சீனா, பாகிஸ்தான், எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகள் வேறு தேதிகளில் புத்தாண்டை கடைபிடிக்கின்றன. இருப்பினும் உலகில் சில நாடுகளை தவிர அனைத்து நாடுகளும் ஜார்ஜியன் காலண்டர் அடிப்படையாகக் கொண்டு ஜன., 1ம் தேதியை புத்தாண்டாக கோலாகலமாக கொண்டாடுகின்றன

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.