ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை ,,


கின்னஸ் சாதனை முயற்சியாக ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஊட்டி நிஷாலி, தற்போது 4,000 சிலைகளை வாங்கி வீடு முழுவதும் அலங்கரித்து வைத்துள்ளார். கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற பலர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் வித்தியாசமாக ஏதாவது செய்து சாதனை படைக்கின்றனர். அந்த வகையில் ஊட்டியை சேர்ந்த நிஷாலி மஞ்சு பாஷினி என்பவர் தற்போது அதிகமாக விநாயகர் சிலைகளை வாங்கி சேர்த்து வைத்துள்ளார். கின்னஸ் சாதனை புரிய இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
இவரது தந்தை ஹரிதாஸ். இவர் காவல்துறையில் எஸ்ஐ ஆக உள்ளார். நிஷாலினியின் சாதனைக்கு அவரது தந்தையும் உறுதுணையாக இருக்கிறார். நிஷாலி வாங்கி குவிக்கும் குட்டி, குட்டி விநாயகர் சிலைக்காக பூஜை அறை முழுவதும் ஷோகேஸ் செய்து வைத்துள்ளனர். இவர் இந்த விநாயகர் சிலைகளை வாங்கி குவிப்பதற்கு மற்றொரு காரணத்தையும் கூறுகிறார்.
வைரம், தங்கம், பித்தளை, களிமண், மரம், பாக்கு, சோப்பு, சங்கு, மின் விளக்குகள், இசை கருவிகள் போன்றவைகளில் விநாயகர் சிலை மற்றும் உருவம் பதித்த பொருட் களை வாங்கி வருகிறேன். என்னிடம் உள்ள கம்மல், மோதிரம், வளையல், கழுத்து செயின் என எல்லாவற்றிலும் விநாயகர் மட்டுமே இருப்பார். நான் ஏன் இந்த விநாயகர் சிலையை வைத்து ஒரு சாதனை படைக்கக் கூடாது என நினைத்தேன். அதன்படி இப்போது சாதனைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளேன் என்றார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.