பூந்தமல்லி பகுதியில் மூன்று கோவில்களில் புகுந்து உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பூந்தமல்லியை அடுத்த சென்னீர்க்குப்பம் மேட்டு தெருவில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் கோவில் கதவில் பொருத்தப்பட்டிருந்த உண்டியலை சில ஆசாமிகள், பெயர்த்து எடுத்துச் சென்றுள்ளனர். இதேபோன்று, வானகரம் ஆண்டாள் நகர் பகுதியில் புற்றுக்கோவில் உள்ளது. நேற்று முன்தினம் அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை ஆசாமிகள் திருடிச் சென்றுள்ளனர்.
திருவேற்காடு கோலடி பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் உண்டியலில் இருந்த ரூ.2 ஆயிரத்தை ஆசாமிகள் திருடிச் சென்றனர். இந்த 3 சம்பவங்கள் குறித்தும் காவல்துறையின வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். கடவுள் இருந்தால் இப்படி கொள்ளைகள் எல்லாம் நடக்குமா? அவனின்றி ஓரணுவும் அசையாது என்று கூறும் பக்தர்களே இதற்கு என்ன பதில் சொல்லப்போகின்றீர்கள்? சிந்திக்க வேண்டாமா?
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen