இத்திருத்தலங்களுக்கு வாருங்கள்! திருமணம் கைகூடும்!!!

 
திருமணஞ்சேரி, ஆலங்குடி, ஸ்ரீவாஞ்சியம், திருமருகல், திருவிடந் தை, திருவேதிக்குடி, பிள்ளையார்பட்டி, திருவீழிமிழலை, திருப்பர ங்குன்றம், கன்னியாகுமரி, காஞ்சி, மாங்காடு, ஸ்ரீ வில்லிபுத்தூர், திருச்செந்தூர், திருசத்தி முற்றம், திருமணஞ்சேரி, மணமுடிச்ச நல்லூர், திருப்பாச் சேத்தி, திருவெண் காடு, திருவேள்விக்குடி, திருநெல்வே லி, திருவாரூர், வேதாரண்யம், திருவி டைமருதூர், கும்பகோ ணம், திருநல்லூர், திருமழப்பாடி, திருப் பாலைத்துறை, பந்த நல்லூர், மதுரை, திருக்குற்றாலம், திருவேற் காடு, திருச்சோற்றுத்துறை, வைத்தீ ஸ்வரன் கோவில், திருநாகேஸ் வரம், பூவாளுர் சக்தி கோவில், திருமணமங்கலம் விசாலேஸ் வரன் கோவில், தாடிக்கொம்பு, திருத்துறை பூண்டி ஆகிய தலங்க ளில் ஏதேனும் ஒன்றுக்கு பங்குனி உத்திரம் தினத்தன்று சென்று திருமணம் விரைவில் முடிய வேண்டும் என வேண்டிக் கொண்டு வரலாம்.

வேண்டுதல் சீக்கிரம் நிறைவேறும். மங்கல மந்திரங்களை ரிஷிக ளும் முனிவர்களும் முழங்க, சிவபெரு மான் மணமகள் பார்வதியின் கரத் தைப் பற்றிக் கொள்ளும் கோலமிது. இக் கோலத்தை திருமணஞ்சேரி, திருவா ரூர், வேள்விக்குடி, திருவாவடு துறை ஆகிய தலங்களில் காணலாம். மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் இதைக் காண லாம். திருமால் கன்னிகா தானம் செய்து வைக்க, பிரம்மன் வேள்வி நடத்த, சொக்கநாதரான சிவன் மீனாட்சியம் மையை மணக்கிறார். திருமண வைப வத்தில் கன்னிகாதானம் அளிக்கும் சடங்குதான் முக்கியமானது. இக்கோ ல சுதைச்சிற்பம்தான் எல்லா திருமண மண்டபங்களிலும் மண மேடையின் பின்புற சுவரில் இடம் பெற்றுள்ளது. அவ்வளவு அழகிய அற்புதமான காட்சி இது. மாங்கல்யதாரணம் முடிந்தபின் மாப்பி ள்ளை பெண்ணின் கைப் பிடித்து வேள் வித் தீயை வலம் வருவார். இக்காட்சி யை அச்சு தமங்கல திருக்கோவில் கோட்ட த்தில் காணலாம். திருமணம் முடிந்து தம்பதி சமேதராக அமர்ந்து யாவர்க் கும் ஆசி கூறும் கோலம். இக்கோலத் தை திரு வேற்காடு, திருநல்லூர், இடும்பவனம் ஆகிய தலங்களி ல் காணலாம். தம்பதி
சமேதரராய் ஆசி வழங்கியபின் முளைப் பாலிகை எடுத்துச் செல் வர். இக்கோலத்தை திருமழிசை ஒத்தாண் டேஸ்வரர் ஆலயம், திரு முல்லைவாயில் மாசிலா மணீஸ்வரர் ஆலயங்களில் காண லாம். இப்படிப்பட்ட சிவபார்வதி திரும ணக் கோலங்களில் ஏதே னும் ஒன் றை பங்குனி உத்திரம் தினத்தன்று தரிசித்தாலும், ஆலயங்களில் திரு மண வைபவம் நடைபெறும் போது அதில் கலந்து கொண்டாலும் மங்களகரமான மண வாழ்வு பெற்று மகிழ்வுடன் வாழ லாம். கன்னிகள் விரத மிருந்து இப்படி தரிசித்தால் விரை வில் திருமணம் கூடுவதுடன், நல்ல கணவன் கிடைத்து இனிமை யான வாழ்வும் அமையும்

 

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.