அதிசயங்களை நிகழ்த்தும் ஏழுமலையான்...


திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை. வெள்ளிக்கிழமைகளிலும் மார்கழிமாதத்திலும் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. சிவராத்திரி அன்று ÷க்ஷத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப் பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெறுகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய

ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்தப் பாடல்களை செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதி கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்ன மய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர் மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமலையான் மீது சேஷாசல நாமம், வராளி ராகத்தில் பாடியுள்ளார். அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது

 மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்ற ஐதிகம் உள்ளது.
ஏழுமலையானின் ஸ்தல விருட்சம் புளிய மரம். ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்ணுவாகவும், ஒருநாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது. ஏழுமலையானின்

அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்றபடியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விட வேண்டும். இது விசேஷ வழிபாடாகும். வெள்ளிக் கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும். வடகலை சம்பிரதாயத்தில்

வேங்கடமெனப்பெற்ற என்ற பாசுரமும், தனியன்களும் இடம்பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.