இரண்டாவது மகோற்சவம் எனக் கருதுமளவுக்கு
நேற்றைய தினம் இந்துக்களின் முருக வழிபாடான கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இதையொட்டி
தொண்டைமானாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்ததில் நேற்று நடைபெற்ற கந்தசஷ்டி சிறப்புப் பூஜை வழிபாடுகளைப் படங்களில் காணலாம்.
படங்களில் கந்தசஷ்டி விரத பூசைகளில் பக்தர்கள் கலந்து கொள்வதை காணலாம். சந்நிதி கோயிலில் இரவு பகலாக தங்கியிருந்து கந்தசஷ்டி விரதம் அனுஷ்டிப்பது வழமை.
செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் இரண்டாவது வருட மகோற்சவம் எனக் கருதுமளவுக்கு கந்தசஷ்டி விரதம் இங்கு பக்தர்களால் அனுஷ்டிக்கப்படுவது, அதிலும் குறிப்பாக சில பக்தர்கள் இங்கு கோவிலில் தங்கியிருந்து விரதத்தைக் அனுஷ்டிக்கப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen