சிவத்தொண்டு என நம் சான்றோர்கள் சிலவற்றை வகுத்து வைத்துள்ளார்கள்
1. இறை அடியார்களாகிய நாயன்மார் குரு பூஜை நடத்துவது
2.ஆலய உழவாரப்பணி செய்வது
3.ஆலய வழிபாட்டுக்கு மலர் கொடுப்பது தொடுப்பது ஆலய நந்தவனம் பராமரிப்பு
4.திருமுறைகளை ஒதுவது அவற்றை பயிற்றுவிப்பது
5.பெரியபுராணத்தை மக்களிடம் சேர்த்து அடியார்களின் பெருமைகளை கூறுதல்
6.ஐந்தெழுத்தின் மகத்துவம் பற்றிக் கூறி ஜெபிக்க சொல்வது
7.தீப ஒளி இல்லாமல் இருக்கும் ஆலயங்க ளில் விளக்கேற்ற்றுவது , அடியார்களை அப்பணிக்கு தூண்டுவது தீப எண்ணை வாங்கித் தருவது
8.ஒரு கால பூஜை இல்லாத கோவில்களில் பூஜை நடக்க ஏற்பாடு செய்வது
9.பூஜை செய்ய சிவாச்சாரியார் இல்லையா? அதற்கு ஏற்பாடு செய்து பூஜை நடத்தலாம் அவருக்கு ஊதியம் வழங்க மக்களிடம் வீட்டுக்கு 50,100 என கேபிள் T .V செலவைப் போல என்று சொல்லி நம் ஊர் கோவிலில் பூஜை நடந்தால் நம் ஊர் செழிக்கும் என்று எடுத்துக்கூறி செயல்படுத்துவது
10.கோவில்களில் ஓதுவாமூர்த்திகள் இருந்தால் சிறு பிள்ளைகளுக்கு திருமுறை களை கற்றுக்கொடுக்க சொல்லலாம் அதனால் அவருக்கும் பிழைப்பு கிடைக்கும்
11.ஆலயம் வரும் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பது
12.புண்ணியகாலம் உற்சவ காலங்களில் ஆலய தூய்மை செய்தல் தேர் வடம் இழுத்தல்
13.மதமாற்றத்தை தடுக்கலாம்
14.சைவ சின்னங்களான திருநீறு ருத்ராட்சம் அவைகளை அணியச் சொல்லி அதனால் வரும் பயன்களை எடுத்துக்கூறலாம்
15.மெய்கண்டசாத்திரங்கள் பற்றி சிறு சொற் பொழிவு போன்று உள்ளூர் தமிழாசிரியர்க ளை கொண்டு நடத்தலாம் நாம் அழைத்தால் போதும் அவர்கள் மறுக்க மாட்டார்கள்
16.கொஞ்சம் நல்ல ஒரு அணியாக இருந்தீர் களானால் 12 ஆண்டுக்கு ஒரு முறை செய்ய வேண்டிய குடமுழுக்கு நடத்தலாம்
17.கோ சாலை பசுக்களை பராமரிக்க உதவலாம்
மேற்சொன்ன இந்த சிவ கைங்கரியங்கள் நடந்தாலே அந்த ஊர் செழிக்கும்.நம்முடைய குழந்தைகளை மேற்சொன்ன செயல்களுக்கு ஊக்குவிக்கலாம்
தமிழகம் இந்த ஆண்டு வறண்டு போக இதுவும் ஒரு காரணம் கடவுள் பக்தி மக்களி டம் குறைய குறைய வறுமை தாண்டவ மாடும் எவ்வளவு கோயில்கள் பராமரிப் பில்லாமல் இருக்கின்றன இது நம் சொத்தில்லையா? நம் மூதாதையர்
சேர்த்து வைத்ததில்லையா ? புதிய கோவில்கள் பாஸ்ட் புட் கோவில்களுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள் இந்த ஜென்மத்தில் அது போன்று ஒரு கோவில் நாம் கட்ட முடியுமா ?
சிவதொழில்
மேற்சொன்ன எல்லாப் பணிகளையும் தொழிலாக காசு பண்ணும் கூட்டம் இருக்கிறது அவர்கள் ஒரு 25 ரூபாய் சாமி படத்தை 350 ரூபாய்க்கு விற்கிறார்கள் யாத்திரை வழி நடத்துவது கட்டணத்துடன் பயிற்சி வகுப்பு நடத்துவது தனக்கென ஒரு குரூப் சேர்ப்பது அதற்கு செலக்ட் செய்ய ஜாதகம் போட்டோ கேட்டு வாங்கி
பிளாக்மெயில் செய்வது ஏதாவது ஒரு வழியில் கவர்ச்சியான அறிவிப்பு கொடுத்து நாங்கள் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்று கூறுவார்கள் சிவனை மிஞ்சி எவனும் இல்லை குரு என்பவர் உண்மையான ஆன்மீகம்
என்ன என்று எடுத்து கூறி வழிகாட்ட வேண்டும் அதை விடுத்து மரத்தடி ஜோதிடர் மாதிரி வழிநடத்துவது ஆன்மீகம் அல்ல ஜோதிடர்களை குறை சொல்வது நம் நோக்கம் அல்ல ஜோதிடம் என்பது வான சாஸ்திரம் அதை மக்களும் எதற்கு பயன் படுத்த வேண்டுமோ அதற்கு பயன்படுத்த வேண்டும் தொட்டது தொண்ணூறுக்கும் ஜோதிடம் கேட்டால் அவர்கள் தெரிகிறதோ இல்லையோ கதை ஒன்று உருவாக்கி காசு பார்ப்பார்கள் ஆன்மீகத்தை முழுநேர தொழிலாக கொண்டவர்கள் இருக்கிறார்கள்
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம்
ஆன்மீகத்தை தலைப்பாக கொண்ட ஒரு வலைப்பூவில் கடன் தரக்கூடாத நாட்கள் என்று அவர் குரு உபதேசம் செய்தார் என்று எழுதப்பட்டிருந்தது இவ்வளவுக்கும் அவர் ஜோதிடத்தை தொழிலாக கொண்டவர் இந்த கடன் தரக்கூடாத நாட்கள் பற்றி நமது வாசன் பஞ்சாங்கத்திலும் மற்ற பஞ்சாங்கத்திலும் ஆண்டு தோறும் வருகிறது இதோ அந்த பாடல்
ஆதிரை பரணி கார்த்திகை ஆயில்யம் முப்பூரம் கேட்டை,
தீதுறு விசாகம் சோதி சித்திரை மகம் ஈராறும்
மாதனம் கொண்டார் தாரார் வழிநடைப்பட்டார் மீளார்
பாய்தனில் படுத்தோர் தேறார் பாம்பின் வாய்த்தேரைதானே
இது ஜோதிட கிரக சிந்தாமணியில் உள்ள பாடலாகும்
பரணி,கார்த்திகை,திருவாதிரை,ஆயில்யம்,
மகம்,சித்திரை,சுவாதி,விசாகம்,கேட்டை,
பூரம், பூராடம்,பூரட்டாதி இந்த 12 நட்சத்திரத்திலும் கடன் வாங்கியவர் மட்டுமல்ல கொடுத்தவரும் பயணம்
போனவரும் நோயில் படுத்தவரும் மீள மாட்டார் என்கிறது இதையே கோளறு பதிகத்தில் சம்பந்த சுவாமிகள் 2 ஆவது பாடலில் ஒன்பதோடு ஒன்று ஏழு பதினெட்டொடு ஆறும் உடனாய நாட்கள் என்று அருளியுள்ளார்
ஆனால் அவர் இந்த விஷயத்தை தன் குருநாதர் கண்டுபிடித்து சொன்னது போல அவர் வெளியிட்டிருக்கிறார் அப்படி என்றால் குரு எப்படி சிஷ்யன் எப்படி? எப்படி மக்களை திசை திருப்புகிறார்கள் என்று பாருங்கள்
மேலும் பிறவா யாக்கைப் பெரியோனாகிய சிவபெருமான் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தார் என்கிறார்
மீண்டும் மீண்டும் அடியேன் வலியுறுத்துவது ஆன்மீகம் என்பது பரிகாரம் செய்வதோ பணத்திற்காக மந்திரம் ஜெபிப்பதோ அல்ல. ஆன்மா கடைத்தேற என்ன வழியை நால்வர் அருளி உள்ளார்களோ அதை பின்பற்றுவது தான் அதனால் தான் நாலு பேர் போற வழியில் போங்கள் என்று பெரியவர்கள் சொன்னார்கள் அந்த நால்வர் சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் சுவாமிகள்
ஆன்மீக தொண்டுக்கு உதாரணம்
1.சிவாயநமஹ என்ற திருப்பெயர் கொண்ட திரு .லட்சுமி நாராயணன் அவர்கள் தீபம் திருக்குழு என்ற அமைப்பின் மூலம் விளக்கெரியாத கோவில்களை கண்டு பிடித்து அங்கு தீபம் ஏற்றி வைக்கிறார் பிரதிபலன் ஒன்றும் எதிர்பார்க்காமல் நமிநந்தி அடிகள் போல அவருடைய செல் எண் 9884126417 அவர் பணியில்
உங்களையும் இணைத்து கொள்ளுங்கள்
மக்கள் கேட்டு பயனுற வழங்குகிறார்
இதுபோல உண்மையான இறைஅடியார்கள் இன்னும் வருவார்கள்
போற்றி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
0 கருத்துரைகள்:
Kommentar veröffentlichen