ஓம்சிவசிவஓம் ஏன் ஜெபிக்க கூடாது


 1.நமசிவாய - தூல ஐந்தெழுத்து 
2.சிவாய நம - சூக்கும ஐந்தெழுத்து
3.சிவயசிவ  - அதி சூக்கும ஐந்தெழுத்து
4.சிவசிவ    - காரண ஐந்தெழுத்து
5. சி - மகா காரண ஐந்தெழுத்து

ஓம் சிவசிவ ஓம் ஜெபம் பண்ண சொல்பவர் கள்  அதற்கு கொடுக்கும் பிரமாணம் என்ன ? ஏதாவது திருமுறைகளிலோ அல்லது மெய் கண்ட சாத்திரங்களிலிருந்தோ மேற்கோள் காட்டமுடியுமா? பின் எதை வைத்து அதை நம்புவது ?

ஓம் நமசிவாய ஜெபம் பண்ண தீட்சை பெற வேண்டும் என்பதே அவர்கள் சொல்லும் வாதம் வாகனம் ஓட்ட உரிமம் வேண்டும் என்றால் பெற்றுக் கொள்வதில் தவறில்லை. அதை விடுத்து காவலர்கள் இல்லாத வழியில் அழைத்து செல்கிறேன் என்பது போல் உள்ளது இவர்கள் செய்யும் இச்செயல் நம் முன்னோர் சமயகுரவர்கள் நால்வர் சம்பந்தர்பெருமான் அப்பர்சுவாமிகள் சுந்தர மூர்த்தி சுவாமிகள் மாணிக்கவாசக சுவாமிகள் மற்றும் சந்தான  குரவர்கள்  நால்வர் மெய்கண்டார் , அருள்நந்தி சிவாசாரியார், மறைஞானசம்பந்தர் உமாபதிசிவம் ஆகியோர் அருளியது பொய்  என்று சொல்லுவது போல் உள்ளது இவர்கள் வாக்கினை எனதுரை தனதுரையாக சிவபெருமானே ஏற்றுக்கொண்டுள்ளார் நமது சமயத்தில் இவர்கள் அருளியது சிவபெருமான் அருளியது போலவாகும் இவர்கள்  வாக்கே பிரமாணம் ஆகும் .
வேதத்தையும்  பதினென் புராணங்களையும் நமக்கு தொகுத்தளித்த  வியாச மாமுனிவர் வார்த்தைகளே நமக்கு நம் சைவத்தில் பிரமாணம் இல்லை .அப்படி இருக்கும் போது அவர்களை மிஞ்சிய ஞானிகள் யார் உளர் ?
ஓம் நமசிவாய ஜெபம் பண்ண சமய தீட்சை ஒன்றே போதும் ,சிவாயநம ஜெபிக்க அடுத்த கட்டமான விசேட தீட்சை பெற வேண்டும், சிவயசிவ ஜெபிக்க அதற்கும் அடுத்த கட்டமான நிர்வாண தீட்சை பெற்று ஜெபிக்கவேண்டும்,சிவ சிவ ஜெபம் செய்ய ஆச்சார்யா அபிசேகம் பெற்ற மகான்களால் மட்டுமே முடியும் .ஏனெனில் அது முக்தி பஞ்சாட்சரம் எனப்படும் .அதாவது துறவு நிலை உள்ளவர்களும் இனி உலக வாழ்க்கையில் கடமை இல்லை என்பவர்களும் ஜெபிக்க வேண்டிய மந்திரம், சிவசிவ மந்திரத்திற்கு ஓம் எனும் பிரணவம் சேர்க்க வேண்டியதில்லை .
ஓம் சிவ சிவஒம்  நூற்றுக்கணக்கில் ஜெபிக்க வேண்டுமாம் ஆனால் ஓம் நமசிவாய 108 முறை ஜெபித்தால் போதும் ,ஏனெனில் நாம் ஒரு நாளைக்கு 21600 முறை சுவாசிக்கின் றோம் அதில் இரவு உறக்கம் போக பாதி நாளுக்கு 10800 முறை சுவாசிக்கின்றோம் எனவே அதில் 100  மூச்சில் ஒரு மூச்சு என  108 முறை ஜெபித்தால் போதும் அதற்கு மேல் இல்லறவாசிகளுக்கு தேவையில்லை என்பதே பெரியோர்கள் வாக்கு .
ஏக ருத்ராட்சம் (ஒன்று ) எப்போதும் அணியவேண்டும்  சிவசின்னங்களில் ஒன்றான ருத்ராட்சம் அணிந்து எப்போதும் உடலில் இருக்கவேண்டும் .கையில் ஜெபம் செய்து வீட்டில்  எடுத்து வைப்பது தவறு .
மந்திர ஜபம் என்பது நம் பாவமாகிய வினை தீர்க்கவும் அடுத்து  பிறவி இல்லா நிலை பெற்று முக்தி எனும் வீடுபேறு அடையவும் இருக்கவேண்டும். காசுக்காகவோ கடன் கட்டவோ கார் வாங்கவோ அல்ல ,ஆன்மிகம் என்பது ஆன்மா நற்கதி பெறவே .

காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
 ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
 வேதம்நான்கினும்மெய்ப்பொருளாவது
 நாதன் நாமம் நமச்சிவாயவே      -     சம்பந்தர்

சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.  -     அப்பர்

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்பாத மேமனம் பாவித்தேன்
 பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன்
 கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறையூரிற் பாண்டிக் கொடுமுடி
 நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்சொல்லும்நா நமச்சி வாயவே.                                                              -   சுந்தரர்                

போற்றிஓம் நமச்சி வாய புயங்கனே மயங்கு கின்றேன்
போற்றிஓம் நமச்சி வாய புகலிடம் பிறிதொன் றில்லை
போற்றிஓம் நமச்சி வாய புறம்எனைப் போக்கல் கண்டாய்
போற்றிஓம் நமச்சி வாய சயசயபோற்றிபோற்றி
                                                                        -மாணிக்கவாசகர்
இது போன்று  காரண பஞ்சாக்கரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
எவ்வளவோ காரணங்களை முன்னிட்டு மக்கள் எதிர்பார்ப்புகளோடு பிரார்த்திப்பார்கள் சரியான படி நிரூபணம் இல்லாத பிரமாணம் இல்லாத ஒரு மந்திரம் கண்டுபிடித்து ஆளாளுக்கு தான் பேர் வாங்க இது ஒன்றும் விஞ்ஞான கண்டுபிடிப்பு அல்ல இறை நம்பிக்கை மக்களின் நம்பிக்கை ஆன்மீகம் என்பது மக்களின் ஆன்மாவோடு ஒன்றியது நாத்திகர்களுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம் சொல்லக்கூடாத உதாரணம் யூத மதத்தில் பிறந்த இயேசு புது மதம் உருவாக்கியது போல் உள்ளது
சிவஞானபோதம் 9 ஆம் சூத்திரம், சிவஞான சித்தியார் சிவபிரகாசம் திருவருட்பயன் என 14 சாத்திரங்களுமே பஞ்சாக்கரத்தின் மேன்மையை எடுத்து கூறுகின்றன
முதல் வகுப்பு படிக்காமல் ஆராய்ச்சி படிப்பு போல் உள்ளது மக்கள் போலி சாமியார்கள் பிடியில் இருந்து தப்பி பிழைப்பதே அரிதாக உள்ள நிலையில் தவறான மந்திரமே அலைக் கழிக்கும் .
நமசிவாய என்பது 36 தத்துவங்களையும் கடந்த சதாசிவமூர்த்தியின் மூலமந்திரம் ஐந்தெழுத்து மந்திரம் ஸ்ரீகண்ட பரமேஸ்வரனை அதிதெய்வமாக கொண்டது
 மேற்சொன்ன காரணங்களால் தான் ஓம்சிவசிவஓம் என்பது நம்பிக்கைக்கு உகந்த மந்திரம் அல்ல அது முடிவான முடிவை கொண்ட சைவ சமயத்தின் சிவபெருமானின் மந்திரம் அல்ல
                          போற்றி ஓம் நமசிவாய     திருச்சிற்றம்பலம்

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.