1008 சங்காபிசேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

1ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிசேக விழா நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
1008 சங்காபிசேக விழா
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ளது ஆலங்குடி. இங்கு வரலாற்று சிறப்புமிக்க ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமாகும். நவகிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் மாசி மாதம் 4-வது குருவாரத்தில் 1008 சங்காபிசேக விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான சங்காபிசேக விழா நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிசேக, ஆராதனைகள் நடைபெற்றது. காலை 9 மணிக்கு ஹோமமும், மதியம் 1 மணிக்கு அபிசேகமும், 1.30 மணிக்கு மகாபூர்ணாகுதி, 2 மணிக்கு 1008 சங்காபிசேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த விழாவையொட்டி குருபகவானுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
இதில் கோவில் உதவி ஆணையரும், செயல் அலுவலருமான சாத்தையா, தக்காரும், உதவி ஆணையருமான சிவராம்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு 
தரிசனம் செய்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 கருத்துரைகள்:

Kommentar veröffentlichen

Powered by Blogger.